tamilnadu

img

அரசு கல்லூரிகளில் கூடுதலாக 25 சதவீத மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கை

அரசு கல்லூரிகளில் கூடுதலாக  25 சதவீத மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கை

அமைச்சர் கோவி.செழியன் தகவல்

ஞ்சாவூர், மே 14 -  அரசு கல்லூரிகளில் கடந்த ஆண்டை விட நிகழாண்டு கூடுதலாக 25 சதவீத மாணவர் சேர்க்கைக்கு நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரி வித்தார்.  தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடை பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட அவர், பின்னர் செய்தி யாளர்களிடம் தெரிவித்ததாவது: அரசு கல்லூரிகளில் நிகழாண்டு கூடுதல் மாணவர் சேர்க்கைக்கான வழி வகைகளைத் தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.  இதனடிப்படையில் கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரி கள் ஆகியவற்றில் கடந்த ஆண்டை விட நிகழாண்டு கூடுதலாக 25 சதவீ தத்துக்கும் அதிகமான மாணவர் சேர்க்கைக்கு வழிவகை செய்யப் பட்டுள்ளது. அதிகமான விண்ணப்பங்கள் வரும் நிலையில், குறைவான மாணவர் சேர்க்கை நடைபெற்று, மீதமுள்ள விண்ணப்பங்களுக்குரிய மாணவர்கள் பிற கல்லூரிகளைத் தேடிப் படித்து வந்தனர். இதனால், அதே கல்லூரியில் சுழற்சி-2 என்ற நிலையில், அதே பாடப் பிரிவுகளை உருவாக்கித் தந்துள்ளார் தமிழக முதல்வர். அந்த வகையில், நிகழாண்டு 64 கல்லூரிகளில் சுழற்சி-2 முறையைப் பின்பற்றி அதிக மான மாணவர் சேர்க்கைக்கு வழி வகுக்கப்பட்டுள்ளது. மேலும், தொழில்நுட்ப இயக்ககத்திலும், உயர் கல்வித் துறையிலும் தனித்தனியாக 11 பாடப்  பிரிவுகள் புதிதாக அறிமுகம் செய்யப் பட்டுள்ளன. இதன்மூலம் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஒட்டுமொத்த விண்ணப்பங்களின் அடிப்படையில், ஆண்டுதோறும் பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள் வேண்டுகோளுக்கு இணங்க கூடுதலாக 5 சதவீதம், 10 சதவீதம் மாணவர் சேர்க்கை வழங்கப்படும்.  எனவே, அரசு கல்லூரிகளில் அதிக மான எண்ணிக்கையில் மாணவர்கள் பயில்வதற்கான வாய்ப்பை உரு வாக்கித் தந்துள்ளோம். இடைநிற்றல் கூடாது என்ற தத்துவத்தின் அடிப்படை யில் மாணவர் சேர்க்கையை அதி கப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் உயர் கல்வித் துறை செய்து வருகிறது.  நாட்டில் நமது உயர்கல்வித்துறை முதலிடத்தில் இருக்கிறது என்ற சாதனையை, மாணவர் சேர்க்கை யிலும் எட்டுவதற்கான முழு முயற்சி யை உயர் கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது.  அதற்கான அனைத்து ஆக்கத்தை யும், ஊக்கத்தையும் வழங்கி வரும் தமிழக முதலமைச்சருக்கும் துணை முதலமைச்சருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். விழாவுக்கு மருதுபாண்டியர் கல்வி  நிறுவனங்களின் செயலர் மற்றும் நிர்வாக அறங்காவலர் கொ. மருது பாண்டியன் தலைமை வகித்தார். விழாவில் அமைச்சர் கோவி. செழியன் சிறப்புரையாற்றி 340 மாணவ, மாணவி களுக்கு பட்டங்களை வழங்கினார். இவர்களில் 10 பேர் பல்கலைக்கழகத் தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். தஞ்சாவூர் தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவன (நிப்டெம்) இயக்குநர் வி.பழனிமுத்து வாழ்த்துரை வழங்கினார். மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் து.ரோசி, மருதுபாண்டியர் கல்லூரி  முதல்வர் மா.விஜயா, மருதுபாண்டியர் கல்வியியல் கல்லூரி முதல்வர் ப.சுப்பிரமணியன், துணை முதல்வர் ரா.தங்கராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.