தஞ்சாவூர்,ஜன.31- உயர்கல்வியில் தமிழகம் முந்துவதற்கு ஒன்றிய அரசு முட்டுக்கட்டை போடுகிறது என்று குற்றம்சாட்டிய உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன்,துணைவேந்தர் நியமனத்தில் மாநில அரசு தேர்வு செய்த நபரை ஏற்றுக்கொள்வதுதான் ஆளுநருக் கும், அவரது பதவிக்கும் அழகு என்று தெரி வித்தார். ஒன்றிய அரசின் பல்கலைக்கழக மானி யக் குழு திருத்தச் சட்ட வரைவைத் திரும்பப் பெற வலியுறுத்தி தஞ்சாவூர் கீழ ராஜ வீதியில் உள்ள தனியார் கணினி மையத்தில் மாணவர்கள் மின்னஞ்சல் அனுப்பும் போராட்டம் வியாழக்கிழமை நடை பெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:
ஒன்றிய அரசின் பல்கலைக்கழக மானியக் குழு திருத்தச் சட்ட வரைவில் மாணவர்களின் நலனில் உயர்கல்வியில் மிகுந்த சீரழிவைத் தரும் என்பது வேதனை. தமிழகம்தான் உயர் கல்வியில் முத லிடத்தில் இருக்கிறது. இதேபோல, தமிழ கத்தில்தான் முனைவர் பட்டம் பெற்றவர் கள் அதிக அளவில் உள்ளனர். பல்கலைக்கழகத் துணைவேந்தராகக் கல்வியாளர்கள்தான் இருக்க வேண்டும் என்ற நிலை தமிழகத்தில் உள்ளது. இந்தப் புதிய வரைவுக் கொள்கையில் கல்வியாளர் அல்லாதவரும் வரலாம் எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. பல்கலைக்கழக உரிமையைப் பறித்து, மாணவர் நலனைக் கெடுத்து, துணைவேந்தர் தேர்வுக் குழுவில் மாநில அரசின் பிரதிநிதியை இடம்பெறாமல் செய்வது எந்த வகையில் நியாயம்.
தமிழக அரசு உயர்கல்வியில் முந்து வதை ஒன்றிய அரசும், பல்கலைக்கழக மானியக் குழுவும் முட்டுக்கட்டை போடு கின்றன. அதைத் தடுக்கும் முயற்சியில் தமிழ்நாடு முதல்வர் ஈடுபட்டுள்ளார். மாண வர்களும் ஆங்காங்கே தன்னெழுச்சியாக தாங்களாகவே முன் வந்து, புதிய வரைவு கொள்கையைத் திரும்பப் பெறு, மாநில உரிமையைப் பறிக்காதே என்கிற வாசகங்கள் அடங்கிய செய்திகளை ஒன்றிய அரசுக்கு அனுப்பி வருகின்றனர். மாணவர் கள் ஏற்படுத்தி வரும் பெரும் எழுச்சி மூலம் புதிய வரைவு கொள்கை தடுத்து நிறுத்தப் படும். அதைக் காக்கும் பொறுப்பைத் தமிழ்நாடு முதல்வர் மேற்கொள்வார். பாஜக அரசின் கைப்பாவையாக...
அண்ணா பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் புதிய துணைவேந்தர் நியமனத்துக்கு 3 பேர் கொண்ட தேடுதல் குழுவை அமைத்து ஆளுநருக்கு தமிழக அரசு அனுப்பியது. ஆனால், மதுரை காமராசர் பல்கலைக்கழ கத்துக்கு அனுப்பியதை ஆளுநர் ரத்து செய்துள்ளார். மாநில அரசு தேர்வு செய்த நபரை ஏற்றுக் கொள்வதுதான் ஆளுநருக் கும், அவரது பதவிக்கும் அழகு. மாறாக ஏற்றுக் கொள்ளமாட்டோம் என அடம்பிடிப் பது, ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவை யாக இருப்பது போன்றவை ஆளுநராக இருப்பதற்கான தகுதியை இழந்திருப்பதே மாணவர்களின் ஒட்டுமொத்த கண்டனக் குரலாக இருக்கிறது. நீதிமன்றத்தில் நிலு வையில் உள்ள வழக்கு பிப்ரவரி 4 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. அதன் பிறகா வது ஆளுநர் திருந்துவாரா என எதிர்பார்க்கி றோம். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். இந்நிகழ்வில் திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் துரை. சந்திர சேகரன், தஞ்சாவூர் மேயர் சண்.ராமநாதன் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, திமுக தலைமைக் குழு உறுப்பினர் து.செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.