திருப்பரங்குன்றம் நில அளவைத் தூண் மாநில தொல்லியல் துறை குழுவினர் நேரில் ஆய்வு
மதுரை, டிச. 10 - தமிழக தொல்லியல் துறை இணை இயக்குநர் யத்திஷ் குமார் தலைமையில் 7 பேர்களைக் கொண்ட தொல்லியல் துறை அதிகாரிகள் குழு, திருப்பரங்குன்றம் மலை மீது புதனன்று ஆய்வு மேற்கொண்டனர். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள நில அளவை தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டுமென ஆர்எஸ்எஸ் - இந்துத்துவா அமைப்புக்கள் வழக்கு தொடுத்தன. சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமி நாதனும், முறையான விசாரணை எதுவும் நடத்தாமலேயே நில அளவைக் கல்லில் தீபம் ஏற்றுவதற்கு அனுமதி வழங்கினார். இது கடும் விமர்சனங்களுக்கு உள்ளா னது. தமிழக அரசும் இந்த விவகாரத்தில் 2 நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்துள்ளது. நீதிமன்ற அவமதிப்பு விவகாரத்தில், உச்சநீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்துள்ளது. இதனிடையே, மலை உச்சியில் இருப்பது நில அளவைக் கல் தான், தீபத்தூண் அல்ல என்பதற்கான ஆவண ஆதாரங்களை சமூக செயற்பாட்டாளர்கள் வெளியிட்டனர். இந்நிலையில், மாநில தொல்லியல் துறை அதிகாரி யத்திஷ் குமார் தலைமை யில் 7 அதிகாரிகள், மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீண் குமார் உத்தரவின் பேரில், புதன்கிழமையன்று காலை 8:45 மணிக்கு ஆய்வுக்காக திருப்பரங்குன்றம் வந்தனர். இவர்கள், மலை உச்சியில் உள்ள தூணில் 3 மணி நேரமாக ஆய்வு மேற் கொண்டனர். பின்னர், இந்த ஆய்வுகளில் சேகரிக்கப்பட்ட தகவல்களை அறிக்கை யாக அளிப்பதற்காக மதுரை மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்திற்கு புறப்பட்டுச் சென்றனர். வெடிகுண்டு மிரட்டல் முன்னதாக, திருப்பரங்குன்றம் மலை யில் உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மது ரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இ-மெயில் மூலம் மிரட்டல் வந்ததை யொட்டி திருப்பரங்குன்றம் மலை மீது வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனை செய்தனர். அதன் முடிவில் வெடிகுண்டு மற்றும் எரிபொருட்கள் இருப்பதாக வந்த மிரட்டல், வெறும் புரளி என்பது தெரியவந்தது.
