சென்னை விமான நிலையத்தில் 10ஆவது நாளாக இன்றும் 70 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
விமானிகள் மற்றும் விமான பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக இண்டிகோ நிறுவன விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை கிட்டத்தட்ட 5000க்கும் மேற்ப்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. திடீரென விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கொள்ளாகினர்.
சென்னையில் இருந்து மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர் நாடுகளுக்குச் செல்லும் சர்வதேச விமானங்களும், தில்லி, ஹைதராபாத், கொல்கத்தா, கொச்சி, பெங்களூரு, கோவை உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்லும் உள்நாட்டு விமானங்கள் என 10ஆவது நாளாக இன்றும் 70 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
