ஆதாரில் பெயர் மாற்றம் செய்ய பான்கார்டை முக்கிய ஆவணமாக சமர்ப்பிக்க முடியாது என யுதய் அறிவித்துள்ளது.
ஒருவர் ஆதாரில் பெயர் மாற்றம் செய்வதற்கு ஒரு சில முக்கிய ஆவணங்களில் ஒன்றை சமர்ப்பிக்கலாம். தற்போது முக்கிய ஆவணங்களின் பட்டியலிலிருந்து பான்கார்டை யுதய் நீக்கியுள்ளது. இனிமேல் ஆதாரில் பெயர் மற்றும் புகைப்படம் மாற்ற பான்கார்டை ஆவணமாகப் பயன்படுத்த முடியாது எனவும் அறிவித்துள்ளது.
மேலும் பாஸ்போர்ட், ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை, லைசென்ஸ் ஆகியவற்றை ஆதார் பெயர் மாற்ற ஆவணமாக இணைக்கலாம் என்றும் புகைப்படத்துடன் கூடிய சாதிச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் போன்ற ஆவணங்களையும் இணைக்கலாம் என்றும் யுதய் தெரிவித்துள்ளது.
