கேரள பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனத்தில் பெயர்களைப் பரிந்துரைக்க தூலியா குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரள அரசின் கீழ் உள்ள அப்துல்கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் டிஜிட்டல் பல்கலைக்கழகம் ஆகியவற்றிற்குத் துணை வேந்தரை நியமிப்பதில் ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் அரசின் பரிந்துரையை நிராகரித்த விவகாரம் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கினை நீதிபதிகள் பர்திவாலா மற்றும் விஸ்வநாதன் ஆகியோர் விசாரித்தனர். அப்போது ஆளுநரின் கடிதத்தைப் படிக்க மறுத்த நீதிபதிகள் இந்தவிவகாரம் குறித்து சமரசம் ஏற்படாதது வருத்தமளிப்பதாகத் தெரிவித்தனர்.
மேலும் 2 பல்கலைக்கழகங்களுக்கும் துணை வேந்தரை நியமிக்க தலா ஒருவரின் பெயரை டிச.18 ஆம் தேதி சீலிட்ட கவரில் பரிந்துரைத்து சமர்ப்பிக்கக் கோரி ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய தூலியா குழுவுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
