இன்று ஆலங்குளத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்
தென்காசி, ஜன. 21- தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் ஜனவரி 22 அன்று நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. நெட்டூர் வட்டாரம், ஆலங்குளம் எஸ்.எஸ்.என். திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற இருந்த மருத்துவ முகாம் தற்போது ஆலங்குளம் சமுதாய நலக்கூடத்தில் (ஆலங்குளம் பேருந்து நிலையம் பின்புறம்) நடைபெற உள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கான சான்றிதழ், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை போன்ற அனைத்து சேவைகளும் தகுதியுள்ளவர்களுக்கு ஒரே இடத்தில் கிடைக்கும் விதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே, பொது மக்கள் அனைவரும் முகாமிற்கு வருகை தந்து மருத்துவப் பரிசோதனை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
