புதுக்காட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மகாகவி பாரதியாரின் பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. 50-க்கும் மேற்பட்ட மழலை பாரதிகள் மகாகவி பாரதி படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தனர். நிகழ்வுக்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமை வகித்தார். பள்ளி இயக்குனர் ரா.சுதர்சன் முன்னிலை வகித்தார். ஏராளமான மாணவர்களும் ஆசிரியர்களும் பாரதியார் படத்துக்கு மலர்தூவி மரியாதை செய்தனர்.
