tamilnadu

img

விரைவில் 3.38 லட்சம் பெண் குழந்தைகளுக்கு கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி

சென்னை, டிச.12 - மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னை ஓமந்தூ ரார் அரசினர் பன்னோக்கு உயர்சிறப்பு  மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தினம்-2025 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.  அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் எச்ஐவி தொற்று  0.16 சதவீதமாக உள்ளது. இது  இந்திய சராசரியான 0.23 சதவீதத்தை விட குறைவு. இந்தியாவில், தமிழ் நாடு 100 சதவீதம் கருவுற்ற தாய்மார்களுக்கு எச்ஐவி மற்றும் சிபிலிஸ் பரிசோதனைகள் செய்யும்  முதல் மாநிலமாகும். எச்ஐவி தொற்றை கண்டறிய 2600 நம்பிக்கை  மையங்களும், இலவச சிகிச்சைக் காக 81 கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்களும் செயல்படுகின்றன. பீகார் மாநில சித்தாமாரி மாவட் டத்தில் ஆன்மீக நிகழ்ச்சியில் ஒரே  கத்தியால் நெற்றியில் கீறல் போடப் பட்டதால் 7500 பேர் எச்ஐவி தொற்றுக்கு ஆளானதாக தகவல்கள்  வெளியாகியுள்ளன. இதில் 400 குழந்தைகளும் அடங்குவர். இது போன்ற நிகழ்வுகள் தமிழ்நாட்டில் நடைபெறுகின்றனவா என்று  கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மூன்று  நாட்களுக்கு முன் ரத்த ஓவியம்  வரையும் 10-க்கும் மேற்பட்ட கடை களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. எய்ட்ஸ் தொற்று பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கான கலைஞர் அறக் கட்டளைக்கு 2009இல் ஒதுக்கப்பட்ட ரூ.5 கோடி, தற்போது ரூ.29 கோடி யாக உயர்ந்துள்ளது. தற்போது எச்ஐவி பாதிக்கப்பட்ட 7,618 குழந்தை களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப் படுகிறது.

கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம் குறித்து அமைச்சர் தெரிவித்தபோது, முதலமைச்சர் கடந்த நிதிநிலை அறிக்கையில் ரூ.36 கோடி மதிப்பீட்டில் 9 வயது முதல் 14 வயது பெண் குழந்தைகளுக்கு ஹியூமன் பாபிலோமா வைரஸ் தடுப்பூசி இலவசமாக வழங்க அறிவித்ததாகக் கூறினார். இந்த திட்டம் அடுத்த மாத இறுதிக்குள் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப் படும். ஒப்பந்தப் பணி நிறைவடை யும் தருவாயில் உள்ளது. மருத்துவர்களுக்கு இந்த வாரம் முதல் பயிற்சி வழங்கப்பட்டு வரு கிறது. கருப்பைவாய் புற்றுநோய் பாதிப்பு அதிகம் உள்ள அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, தர்மபுரி ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த மாதம் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இதில் முதல் கட்டமாக 27,000 குழந்தைகள் பயன் பெறுவர். பின்னர் தமிழ்நாடு முழு வதும் 3,38,000 பெண் குழந்தை களுக்கு இந்த தடுப்பூசி வழங்கப்ப டும். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் முதன்முறையாக இந்த  தடுப்பூசி இலவசமாக வழங்கப்படு கிறது. தனியார் மருத்துவமனை களில் இதற்கு ரூ.2000 செலவாகும். ஒவ்வொரு குழந்தைக்கும் இரண்டு தடுப்பூசிகள் வழங்கப்படும். கோவிட்  காலத்தில் தமிழ்நாடு முன்னெடுப்பு காட்டியதைப் போல், இந்த திட்டத் தையும் ஒன்றிய அரசு இந்தியா முழு வதும் செயல்படுத்த வேண்டும்  என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித் தார்.