மெலட்டூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கரம்பத்தூர் முல்லைவனம் நகர் அருகில் விவசாயிகள் வயலுக்குச் செல்லும் பாதையை ஆக்கிரமித்து, மின் கம்பம் அமைக்கப்பட்டுள்ளதையும், ஆக்கிரமப்பினை உடனே முழுமையாக அகற்ற வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், பாபநாசம் மின்சார வாரியத்தில் மனு அளித்தும், நுழைவு வாயில் முன்பு தர்ணாவும் நடந்தது. இதில் ஏஐடியுசி மாநிலச் செயலர் தில்லைவனம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார், அம்மாப்பேட்டை ஒன்றியச் செயலாளர் வெங்கடேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
