பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க மாநாட்டு கொடியேற்றம்
சேலம், டிச.12- பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கத்தின் அகில இந்திய மாநாடு கோவை மாவட்டத்தில் டிசம்பர் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. மாநாட்டை பிரகடனப்படுத் தும் விதமாக ஐந்து கொடிகளை ஏற்றும் நிகழ்ச்சி பழைய பேருந்து நிலையம் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடை பெற்றது. முன்னதாக தபால் தந்தி தொலைபேசி தொழிற்சங்க இயக்கங்களின் ஒப்பற்ற தலைவர் தோழர் கே.ஜி. போஸ் அவர்களின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் மதியழகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில உதவிச்செயலாளர் இ. கோபால், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டச் செயலா ளர் ஹரிகரன், ஒப்பந்த ஊழியர்கள் சங்க மாவட்டச் செய லாளர் எம்.செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
