tamilnadu

img

‘சமூக ஜனநாயகக் கையேடு’ நூல் வெளியீடு

‘சமூக ஜனநாயகக் கையேடு’ நூல் வெளியீடு

கோவை, டிச.12- பொதுப் பள்ளிக்கான மாநில மேடை சார்பில் பள்ளி மாணவர்கள் மத்தியில் சகோதரத்துவத்தையும் ஒற்றுமையையும் உணரச் செய்யும் செயல்பாடுகளை உள்ளடக்கிய ‘சமூக ஜனநாயகக் கையேடு’ நூல்  வெளியீட்டு விழா, வெள்ளியன்று கோவையில் நடைபெற்றது. கோவை அரசு கலைக்கல்லூரி அருகே உள்ள திவ்யோதயா அரங் கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு, பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் மாவட்டத் தலைவர் ச.சுப்ரமணியம் தலைமை ஏற்றார். மாணவர் நல பெற்றோர் சங்க  மாவட்டச் செயலாளர் வி.தெய் வேந்திரன் வரவேற்றார்.  நிகழ்வில் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனை வர் இ.பாலகுருசாமி நூலினை வெளியிட, புலவர் செந்தலை ந. கௌதமன் முதல் பிரதியைப் பெற் றுக்கொண்டு சிறப்புரையாற்றி னர்.  இந்நூலின் மதிப்புரையை புல வர் கா.அப்பாவு வழங்க, பாரதியார் பல்கலைக்கழக உதவிப் பேராசிரி யர் சி.உஷா நூல் திறனாய்வு செய்தார். நிகழ்வை வாழ்த்தி, தமு எகச மாநில துணை பொதுச் செய லாளர் அ.கரீம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலா ளர் எம்.தினேஷ் ராஜா, இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலா ளர் ஜி.அகமது ஜூல்பிகர், மற்றும் முனைவர் கா.சுந்தராசன் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். நூல் உரு வாக்கத்தின் நோக்கம் குறித்துப் பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர்  பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு  ஏற்புரையாற்றினார். முன்னதாக, கோவை பெரிய நாயக்கன்பாளையம் கேர் மழலை யர் மற்றும் தொடக்கப்பள்ளி மாண வர்கள், பாரதியார் உள்ளிட்டோ ரின் வேடங்களை அணிந்து, சகோ தரத்துவத்தை வலியுறுத்தும் வகை யில் கும்மி நடனம் நடைபெற்றது. நிகழ்வில், கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட திர ளானோர் பங்கேற்றனர். நிறை வாக, கல்வி கூட்டமைப்பைச்  சேர்ந்த மூ.அன்பரசன் நன்றி கூறி னார்.