நாமக்கல், டிச.12 - 40 ஆண்டு கால கோழிப்பண்ணை வரலாற்றில் முதல் முறையாக நாமக்கல் மாவட்டத்தில் ஒரு கோழி முட்டை யின் மொத்த கொள்முதல் விலை ரூ.6.15 ஆக உயர்ந்து உள்ளது. இது இதுவரையிலான உச்சபட்ச விலையாகும். இன்றைய நிலவரப்படி முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.6.15 ஆக மொத்த வியாபாரிகளால் வாங்கப்படுகிறது. சில்லறை விற்பனை கடைகளில் ஒரு முட்டை ரூ.7 முதல் ரூ.7.50 வரை விற்பனை செய்யப்படு கிறது. கார்த்திகை மாதத்தில் சபரிமலை ஐயப்பன் பக்தர்கள் விரதமிருப்பதால் அசைவ உணவு நுகர்வு குறைந்திருக் கும் நிலையில்கூட முட்டை விலை இவ்வாறு உயர்ந்து உள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு கேக் தயாரிப்புக்காக முட்டை அதிகளவில் கொள்முதல் செய்யப்படுவதால் இந்த விலை உயர்வு ஏற்பட்டிருக்க லாம் என்று கருதப்படுகிறது. அடுத்தடுத்த மாதங்களில் முட்டை விலை மேலும் உயருமோ என்ற அச்சம் நுகர்வோரிடையே எழுந்து உள்ளது.