tamilnadu

img

விளையாட்டு

ஸ்போர்ட்ஸ் காலண்டர் - 2026

உலகம் முழுவதும் வியாழனன்று கோலாகல  கொண்டாட்டத்துடன் 2026ஆம்  ஆண்டு  பிறந்தது. இந்த 2026ஆம் ஆண்டுக்கான “ஸ்போர்ட்ஸ் காலண்டர் (விளையாட்டு அட்டவணை)” வெளியாகி யுள்ளது. அதில், ஆண்டின் முதல் சர்வதேச உலக தொடரான 19 வயதுக்குட்பட்டவருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஜன., 15ஆம் தேதி முதல் பிப்ரவரி 6ஆம் தேதி வரை ஜிம்பாப்வே, நமீபியாவில் நடக்கிறது. ஆடவர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி  7ஆம் தேதி தொடங்கி மார்ச் 8ஆம் தேதி வரை இந்தியா, இலங்கை நாடுகளில் கூட்டாக நடைபெறுகிறது.  அதனை தொடர்ந்து 10ஆவது மகளிர் டி-20 உல கக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடர் ஜூன் 12 முதல் ஜூலை 5ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெறுகிறது. உலகின் 2ஆவது மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடரின் 23ஆவது சீசன் ஜூன் 11ஆம் தேதி தொடங்கி ஜூலை 19ஆம் தேதி வரை 39 நாட்கள் கனடா, மெக்சிகோ  மற்றும் அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்துகின்றன.  அதற்கு அடுத்தப்படியாக 16ஆவது ஆடவர்  மற்றும் மகளிர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டி ஆகஸ்ட் 15 முதல் ஆகஸ்ட் 30 வரை நடைபெறுகிறது. இந்த போட்டியை பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. குறிப்பு : உலகளவிலான தொடர்கள் மட்டும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன

மகிழ்ச்சியில் 157 ரன்கள், ஏமாற்றத்தில் இரட்டை சதம் கிரிக்கெட் உலகை கவனிக்க வைத்த சர்பிராஸ் கான், கான்வே

2026ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் கடந்த மாதம் நடைபெற்றது. இந்த ஏலத்தி ற்கு பின் நிகழ்ந்த  2 முக்கிய சம்பவ ங்கள் கிரிக்கெட் உலகில் கவனிக்கத் தக்க விஷயமாக மாறியுள்ளது. இந்த  2 சம்பவங்கள் அணிகள் மற்றும் சாத னை அம்சமாக அரங்கேறவில்லை. இரண்டு தனிப்பட்ட வீரர்களிடம் இருந்து நிகழ்ந்துள்ளது. ஒன்று  மகிழ்ச்சியின் களிப்பில்; மற்றொன்று இயலாமையின் வெளிப்பாட்டில் நிகழ்ந்தது. அதனை பற்றி பார்க்கலாம்: சர்பிராஸ் கான் ஐபிஎல் ஏலத்தின் தொடக்க நிலை யில் இந்திய அணியின் அதிரடி பேட்டர் மற்றும் துடிப்புமிக்க வீரர்களில் ஒரு வரான சர்பிராஸ் கானை எந்த அணி யும் ஏலத்தில் எடுக்கவில்லை. ஆனால் சர்பிராஸ் கானின் திறமையை உணர்ந்த சென்னை அணி இறுதியாக அவரை ரூ. 75 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது. இதனை சென்னை அணி நிர்வாகம், ரசிகர்கள் வெகுவாக கொண்டாடினர். அதே போல சர்பிராஸ் கானும் சமூக வலைத்தளங்களில் உற்சாகத்துடன் கொண்டாடினார். இந்நிலையில், ஐபிஎல் போட்டி யில் தன்னை ஒரு வரலாற்று சிறப்பு மிக்க  அணி (சென்னை) ஏலத்தில் எடுத்த மகிழ்ச்சியில் விஜய் ஹசாரே உள்ளூர் ஒருநாள் தொடரில் அதிரடி பார்ம் மூலம் மிரட்டல் கொண்டாட்ட த்தை வெளிப்படுத்தி வருகிறார். புத னன்று கோவா அணிக்கெதிரான ஆட்டத்தில் 75 பந்துகளில் 157 ரன்கள் குவித்து அமர்க்களப் படுத்தினார். இதில் 9 பவுண்டரி, 14 சிக்ஸர், 209.33 ஸ்டிரிக் ரேட்டும் அடங்கும். சர்பிராஸ் கானின் அதிரடி யால் மும்பை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 444 ரன்கள் குவித்தும், 87 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இது மகிழ்ச்சி யில் கிடைத்த நல்ல நிகழ்வாகும். டெவோன் கான்வே ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வந்த நியூ ஸிலாந்து நாட்டின் பேட்டர் டெவோன் கான்வே (விக்கெட் கீப்பர்) 2026ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியும் அவரை வாங்கவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த கான்வே மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ருத்ரதாண்டவம் ஆடினார். 3ஆவது டெஸ்ட் போட்டி யில் ஒரு இரட்டை சதம் (227 ரன்கள்), ஒரு சதம் (100 ரன்கள்) விளாசி, அந்த டெஸ்ட் போட்டியில்  நியூஸிலாந்து அணியை அபார வெற்றி பெறச்செய் தார். ஒரே போட்டியில் 327 ரன்கள் குவித்ததன் மூலம் போட்டியின் ஆட்ட நாயகன் விருதையும் டெவோன் கான்வே வென்றார். இது ஏமாற்றத்தில் அரங்கேறிய உன்னத நிகழ்வாகும். ஒரே ஒரு உள்ளூர் ஐபிஎல் ஏலம் இரு வீரர்களை பார்மிற்கு கொண்டு வந்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.