tamilnadu

img

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நிகழ்ந்த சோகம் சுவிட்சர்லாந்தில் தீ விபத்து : 40 பேர் பலி?

பெர்ன், ஜன. 1 - சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற ‘கிரான்ஸ் - மொண்டானா’ ஸ்கையிங் ரிசார்ட்டில் உள்ள ‘லே கான்ஸ்டலே ஷன்’ பாரில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 40 பேர் உயிரிழந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும்,  100-க்கும் மேற்பட்டோர் படு காயமடைந்துள்ளதால், பலி எண்ணி க்கை அதிகரிக்கும் என்றும் கூறப்படு கிறது. வியாழக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் பாரில் புத்தாண்டு கொண்டாட்டம் நடந்து கொண்டு இருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இசை நிகழ்ச்சியின் போது பயன்படுத்தப்பட்ட சில சிறிய ரக வாணவேடிக்கை வெடிப் பொருட்கள் தீ விபத்திற்குக் காரண மாக இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.  மூடிய கட்டடமாக இருந்ததால், தீ பிடித்த பிறகு கட்டடத்திற்குள் இருந்த  வாயுக்கள் அதிக வெப்பத் தின் காரணமாக வெடித்து சிதறி யுள்ளன. இது மோசமான சம்பவம், இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.  காயமடைந்தவர்களின் எண்ணி க்கை அதிகம் என்பதால், அப்பகுதி மருத்துவமனைகளில் ‘அவசர நிலை’ அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆம்புல ன்ஸ்கள் மூலம் காயமடைந்தவர்கள் சுவிட்சர்லாந்தின் பல்வேறு பகுதி களுக்குக் கொண்டு செல்லப்பட்ட தாகவும் தகவல்கள் வெளியாகி யுள்ளன. உயிரிழந்தவர்களின் உடல்கள் கடுமையாகச் சிதைந் துள்ளதால், அவர்களை அடை யாளம் காண மரபணு (DNA) சோத னை தேவைப்படலாம். இதற்குப் சில நாட்கள் ஆகலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.