சென்னை, ஜன. 1- தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் நிலவும் பேருந்து பற்றாக்குறையைப் போக்குவதற்காக, மாநகர போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட அரசு நிறுவனங்கள் இனி தனியார் பேருந்துகளை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு எடுத்து இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதுவரை தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் மட்டும் தற்காலிகமாக தனியார் பேருந்துகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனால், இப்போது முதல் முறையாக சென்னை மாநகர பேருந்துகள் உட்பட அனைத்துப் பிரிவுகளிலும் தனியார் பேருந்துகளை நிரந்தர அடிப்படையில் வாடகைக்கு எடுக்க அனுமதி வழங்கப் பட்டுள்ளது. தனியார் பேருந்துகள் அரசு சார்பில் இயக்கப்பட்டாலும், பயணிகளிடம் வசூலிக்கப்படும் கட்டணம் மாறாது. அரசுப் பேருந்துகளில் வசூலிக்கப்படும் அதே கட்டணமே இதற்கும் பொருந்தும் என்றும் அரசு தரப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.
சிஐடியு உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு
போக்குவரத்து துறையின் இந்த முடிவுக்கு சிஐடியு உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அரசு தனது சொந்தப் பேருந்துகளை இயக்குவதை விட, தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுப்பது அதிக செலவு பிடிக்கும். தனியார் பேருந்துக்கு அரசு தரும் தொகை 1 கி.மீட்டருக்கு ரூ. 51 ஆகவும் அரசு குளிர்சாதன பேருந்துகளின் செலவு 1 கி. மீட்டருக்கு ரூ.40 முதல் ரூ.45 எனவும் உள்ளது. அரசுப் பேருந்துகளை விட தனியார் பேருந்துகளுக்கு அதிக பணம் வழங்கப்படு வது நிதி இழப்பை ஏற்படுத்தும் என்றும் தொழிற் சங்கங்கள் கவலை தெரிவித்துள்ளன. தனியார் பேருந்து உரிமையாளர்களுக் கும் போக்குவரத்து அதிகாரிகளுக்கும் இடையே ரகசிய உடன்பாடு இருப்பதாகவும் தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த தீபாவளியின் போது, கிளாம் பாக்கம் பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்துகள் நிரம்பிய பிறகே, அதிகாலை நேரங்களில் அரசுப் பேருந்துகள் இயக்கப் பட்டதாக அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். திமுக அரசு ஆட்சிக்கு வந்தபோது 11,900 புதிய பேருந்துகள் வாங்கப்படும் என அறி விக்கப்பட்டது. மார்ச் 2025 வரை சுமார் 3,500 பேருந்துகள் மட்டுமே வாங்கப்பட்டு உள்ளன. 2025-26 இலக்கு 3,000 பேருந்துகள் வாங்கத் திட்டமிடப்பட்டு, ரூ.1,031 கோடி ஒதுக்கப் பட்டது. டிசம்பர் மாதம் வரை இலக்கில் கால் பங்கு கூட எட்டப்படவில்லை. தேர்தல் நெருங்குவதால், குறைந்தபட்சம் 1,800 பேருந்துகளையாவது விரைவாகக் கொண்டு வர அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்ற னர். பழைய அரசுப் பேருந்துகளில் இருக்கை வசதி குறைபாடு, ஜன்னல் மற்றும் பாது காப்புப் பிரச்சனைகள் இருப்பதால், பயணி கள் தனியார் பேருந்துகளை விரும்புவதாக வும் செய்திகள் உலா வருகிறது. இருப்பினும், அரசு தொடர்ந்து தனியார் பேருந்துகளைச் சார்ந்து இருந்தால், எதிர் காலத்தில் அரசுப் போக்குவரத்து சேவை பல வீனமடையும் என்ற அச்சமும் நிலவுகிறது.
