வர்த்தக சிலிண்டர் விலை மீண்டும் உயர்ந்தது!
சென்னை, ஜன. 1- சென்னையில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ. 110 உயர்ந்துள்ளது. இதன்படி, சென்னை யில் வர்த்தகப் பயன்பாட்டுக் கான 19 கிலோ சிலிண்டர் விலை, ஆயிரத்து 849 ரூபாய் 50 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வர்த்தக சிலிண்டர்களின் விலை புதுதில்லியில் ஆயி ரத்து 690 ரூபாயாகவும், கொல் கத்தாவில் ஆயிரத்து 641 ரூபாய் 50 காசுகளாகவும், மும்பையில் ஆயிரத்து 641 ரூபாய் 50 காசுகளாக வும் நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களாக வர்த்தக சிலிண்டர்களின் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், ஜனவரியில் அதிகரித்துள்ளது குறிப் பிடத்தக்கது.
மூன்று மினி டைடல் பூங்கா அமைக்க அரசு டெண்டர்!
சென்னை, ஜன. 1 - திருநெல்வேலி, கன்னி யாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் மினி டைடல் பூங்கா கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. ஒவ்வொரு டைடல் பூங்காவிலும் 500 முதல் 1000 தகவல் தொழில் நுட்ப பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. ஏற்கெனவே, சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி, விழுப்புரம் உள்ளிட்ட சிறிய நகரங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப் பட்டுள்ளன. விழுப்புரம், திருப்பூர், வேலூர், தூத்துக் குடி, தஞ்சாவூர் மற்றும் சேலம் ஆகிய நகரங்களில் மினி டைடல் பூங்காக்கள் செயல்பட்டு வருகின்றன.
வடமாநில இளைஞர் உயிருடன் இருப்பதாக அரசு விளக்கம்
சென்னை, ஜன. 1 - திருத்தணி ரயில் நிலையம் அருகே ஒடிசா வை சேர்ந்த இளைஞர் சூரஜ் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவத்தில், அவர் இறந்து விட்டதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவல் முற்றிலும் வதந்தி என்று தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் 27 அன்று நான்கு பேர் கொண்ட கும்பல் சூரஜை அரிவாளால் கொடூரமாக தாக்கியது. இந்த தாக்குதலை அந்த கும்பலில் இருந்த ஒரு சிறுவன் இன்ஸ்டாகிராம் ரீல்ஸாக வீடியோ எடுத்தார். படுகாயமடைந்த சூரஜ் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். தாக்குதலில் ஈடுபட்டவர்களை அடுத்த நாளே போலீசார் கைது செய்தனர். மூன்று பேர் சிறுவர்கள் என்பதால் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டனர். தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்ட அறிக்கையில், பாதிக்கப்பட்டவர் சிகிச்சை பெற்ற பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி சென்றுள்ளதாகவும், தவறான செய்தி பரப்புவது சட்டப்படி குற்றமாகும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.