tamilnadu

img

வால்டாக்ஸ் சாலை சென்னை உயர்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறைகள் திறப்பு

வால்டாக்ஸ் சாலை சென்னை உயர்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறைகள் திறப்பு

சென்னை, ஜன.1- சென்னை ராயபுரம் மண்டலம் வால்டாக்ஸ் சாலை சென்னை உயர்நிலைப் பள்ளியில், மாநகராட்சி மூலதன நிதியின் கீழ் 1.15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 4 புதிய வகுப்பறைகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் வியாழனன்று திறந்து வைத்தனர். 2,052 சதுர அடி பரப்பளவில் தரை மற்றும் முதல் தளங்களுடன் கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டிடத்தில் மாண வர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர், அவர்களுக்கு இனிப்புகளையும் வழங்கி னார். அதனைத் தொடர்ந்து, பள்ளியில் பயிலும் 172 மாணவர்களுக்கு புத்தகப்பை, நோட்டுப் புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கிய இந்த நிகழ்ச்சியில் மேயர் ஆர்.பிரியா, மாநக ராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.