திருவொற்றியூர், விம்கோ மார்க்கெட் பகுதிகளை விற்பனை மண்டலமாக அறிவித்திடுக! விற்பனைக்குழு உறுப்பினர்கள் வலியுறுத்தல்
சென்னை, ஜன.1- திருவொற்றியூர் மண்டலம் 1இன் விற்பனை குழு கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் (வடக்கு) ரவி கட்டோ தேஜா தலைமையில் நடை பெற்றது. மண்டல துணை அலுவ லர் பத்மநாபன், துணை வருவாய் அலுவலர் அர்ஜுனன், தேர்ந்தெடுக்கப் பட்ட மண்டல விற்பனைக்குழு உறுப்பி னர்கள், போக்குவரத்து காவல்துறை யினர், சுகாதாரத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விற்பனை மண்டலம் விற்பனை அல்லாத மண்டலம் என்று வகைப்படுத்தப்பட்ட ஆலோசனை பட்டியல் முன்வைக்கப்பட்டது. அப்போது விற்பனை குழு உறுப்பி னர்கள் பேசுகையில், விற்பனை மண்டலம் அல்லாத பகுதியாக 9ஆவது வார்டு கிராமத் தெருவை அறிவித்திருப்பதை ஏற்க முடியாது. அதையும் விற்பனை பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று வலி யுறுத்தினார். மேலும் விம்கோ மற்றும் திருவொற்றியூர் மார்க்கெட் அருகில் உள்ள நெடுஞ்சாலையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை யோர வியாபாரிகள் வணிகம் செய்து வருகின்றனர். எனவே அந்த பகுதி களையும் விற்பனை மண்டலமாக அறிவிக்க வேண்டும். அதேபோல் எண்ணூர் விரைவு சாலை, டிஎன்எஸ்பி குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதி, கத்திவாக்கம் நெடுஞ்சாலை, மணலி விரைவுச் சாலையின் சர்வீஸ் சாலை, சடையங்குப்பம் சாலை, சண்முகபுரம், முல்லை நகர், ஜெய்ஹிந்த் நகர் போன்ற பகுதிகளையும் விற்பனை மண்ட லங்களாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி விற்பனை குழு தலைவரிடம் மனு அளித்தனர். மேலும் விற்பனை குழு உறுப்பி னர்களுக்கு அடையாள அட்டை இதுவரை வழங்கவில்லை, கூட்ட அமர்வுப்படி ஆயிரம் ரூபாய் இதுவரை வழங்கவில்லை என்றும் உடனடியாக வழங்க வேண்டும் என்று கேட்டனர். அப்போது அடையாள அட்டை ஒரு வாரத்தில் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும்,மேலும் புதிதாக இணைக்க வேண்டிய விற்பனை மண்டலங்களை பரிசீலனை செய்து, அவற்றையும் இணைப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்தார். அப்போது விற்பனைக்குழு உறுப்பினர்கள் சன்னதி தெருவில் விழாக் காலத்தில் சாலையோர வியாபாரிகள் கடை களை வைப்பதில்லை என்றும், மூன்று நாட்கள் கடைகளை மூடி விடுகிறார்கள் என்றும், இருசக்கர வாகனங்கள், கார்களை அனுமதிப்பதால் தான் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்றும், அவற்றை அனுமதிக்க கூடாது என்றும் வலியுறுத்தினர். திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியில் டிஎச் சாலையில் அனுமதிக்க கூடாது என்றும் காவல்துறையினர் கோரிக்கை விடுத்தனர். அப்போது விற்பனைக்குழு உறுப்பினர்கள் அது சாத்தியமில்லை. அங்கு சாலை மிக அகலமாக இருக்கிறது அங்கும் இருசக்கர வாகனங்களை நிறுத்தி விடுகிறார்கள். அவற்றை முறைப்படுத்தினாலே அங்கு போக்கு வரத்துக்கு நெரிசல் ஏற்படாது என்றும் தெரிவித்தனர். அதற்கு பதில் அளித்த விற்பனைக் குழு தலைவர், சம்பந்தப்பட்ட இடங்களை கள ஆய்வு செய்து எந்த பகுதிகளை இணைக்கலாம் என்பதை இறுதிப்படுத்தலாம் என்று கூறினார். சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்குவதற்காக முகாம் நடைபெற்றும் இதுவரை ஒருவருக்கு கூட கடன் வழங்கவில்லை, எப்போது வழங்கப்படும் என்ற உறுப்பி னர்களின் கேள்விக்கு, ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு வங்கி அலு வலர் நியமனம் செய்து பயிற்சி அளிக்கப்படுகிறது. அடுத்த சில தினங்களில் வங்கிக் கடன் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று வருவாய் துணை அலுவலர் தெரிவித்தார். கூட்டத்தில் விற்பனைக்குழு உறுப்பினர்கள் கபூர், பாளையம், பொம்மி, மலர், ஜெயசித்ரா, அன்சார் அலி, அன்பு, கதிர்வேல், செம்மல், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
