tamilnadu

img

கார் பட்டறையில் தீவிபத்து: 3 கார்கள் எரிந்து நாசம்

கார் பட்டறையில் தீவிபத்து:  3 கார்கள் எரிந்து நாசம்

அம்பத்தூர், ஜன.1- அம்பத்தூர் மேனாம்பேடு கருக்கு பிரதான சாலையில் சிவா (32) என்பவர் நடத்தி வரும் கார் பழுது பார்க்கும் கடையில், புதனன்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கடையிலிருந்து கரும்புகை வெளியேறி தீ மளமளவெனப் பரவியது. தகவலறிந்து வந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு வீரர்கள், சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயைக் கட்டுப்படுத்தினர். இருப்பினும், பழுதுபார்ப்பதற்காகக் கடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 கார்கள் தீயில் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. இந்த விபத்து குறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.