states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் வாழ்த்து

சென்னை: ஆங்கிலப் புத்தாண்டையொட்டி முதல மைச்சர் மு.க.ஸ்டாலினை அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவல கத்தில் திமுக பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுரு கன், பொருளாளர் டி.ஆர். பாலு, துணை பொதுச்செயலா ளர்கள் கனிமொழி, ஆ. ராசா, வெள்ளக்கோவில் சாமி நாதன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரி வித்தனர். காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ்,  விசிக எம்எல்ஏ எஸ்.எஸ். பாலாஜி, மக்கள் விடுதலை கட்சி தலைவர் சு.க. முருகவேல் ராஜன் உள்ளிட்ட கூட்டணி  கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

திமுகவுக்கு எதிர்க்கட்சி அதிமுகதான்: உதயநிதி!

சென்னை: அதிமுக தற்போது வலுவிழந்து இருந்தா லும் அக்கட்சிதான் திமுகவின் முதன்மை எதிர்க்கட்சியாக பார்க்கப்படுவதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்.  ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், பாஜகவை யும் அதன் அனைத்து பி டீம்களையும் எதிர்கொள்ள திமுக  தயாராக இருப்பதாகவும், தமிழகத்தில் மதச்சார்பற்ற சக்தி களை பலவீனப்படுத்த வேண்டும் என்ற பாஜகவின்  முயற்சி  பலிக்காது என்றும் கூறினார். தேசிய ஜனநாயக கூட்ட ணியில் எல்லா முடிவுகளும் தில்லியில் எடுக்கப்பட்டு தமிழக கட்சிகளின் மீது திணிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.  நீண்ட காலமாக அதிமுக பிரதான போட்டியாளராக இருந்தாலும், தற்போது பலம் வாய்ந்த போட்டியாளர் யாரும் இல்லை என்றும் உதயநிதி தெரிவித்தார்.

இரா. முத்தரசன் நடிக்கும்  ‘அரிசி’ படத்தில் வேடன் பாடல்!

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில முன்னாள் செயலாளர் இரா. முத்தரசன் நடிக்கும் ‘அரிசி’  திரைப்படத்தில் மலையாள இசைத்துறையின் பிரபல ராப்  பாடகர் வேடன் பாடலை பாடியுள்ளார்.  இயக்குநர் எஸ்.ஏ. விஜயகுமார் இயக்கும் இப்படம் உணவுக்குப் பின்னுள்ள அரசியல் மற்றும் விவசாயிகள் சந்திக்கும் போராட்டங்களை மையமாகக் கொண்டது. சமுத்திரக்கனியும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இப்படத்தில், வேடன் பாடலாசிரியர் அறிவுடன் இணைந்து  பாடியுள்ளார். இவர்கள் இருவரும் முன்பு ‘பைசன்’ படத்தின் ‘ரெக்க ரெக்க’ பாடலிலும் இணைந்து பாடியிருந்த னர். படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், படப்பிடிப்பிற்கு  பிந்தைய பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு பாராட்டு விழா

சென்னை: குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதா கிருஷ்ணன் வெள்ளிக்கிழமை சென்னை வருகை தரு கிறார். அவருக்காக திட்டமிடப்பட்டு, இரண்டு முறை தள்ளிப் போன பாராட்டு விழா, இப்போது நடைபெறவுள்ளது. எம்.ஜி.ஆர். அறக்கட்டளை சார்பில், முன்னாள் அமைச்சர்  ஹண்டே தலைமையில், கலைவாணர் அரங்கில் நடைபெ றும் இந்த பாராட்டு விழாவில் ஒன்றிய அமைச்சர் எல். முரு கன், இசையமைப்பாளர் இளையராஜா, ஓய்வுபெற்ற நீதி பதிகள், பல்கலைக்கழக வேந்தர்கள், இயக்குநர் பாக்கிய ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர். காலையில் எம்.ஜி.ஆர்.  மருத்துவ பல்கலைக்கழகத்தில் நடக்கும் பட்டமளிப்பு விழாவிலும் சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்து கொள்கிறார்.

காற்றழுத்த தாழ்வுநிலை: ஜன.8 வரை கனமழை

சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்ற ழுத்த தாழ்வு நிலை தமிழக கடலோரத்துக்கு நெருங்கி வந்துள்ளது. இதன் காரணமாக வட கடலோரத்தில் மழை பெய்தது. திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங் களில், புதனன்று 75 மில்லிமீட்டர் மழை பெய்தது. தென்  மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் இன்று மழை  பெய்யும். ஜனவரி 8 முதல் 12-ஆம் தேதி வரையில் கன மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வந்தே பாரத் ரயிலுக்கு விருத்தாசலத்தில் நிறுத்தம்

சென்னை: நெல்லை - சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் பரி சார்த்த முறையில் விருத்தாசலத்தில் இரண்டு நிமிடம் நின்று செல்ல ரயில்வே வாரி யம் அனுமதி அளித்து உள்ளது. தெற்கு ரயில்வே  வெளியிட்ட செய்திக் குறிப் பின்படி, நெல்லையில் இருந்து சென்னை வரும் போது காலை 11.08 முதல் 11.10 வரையும், சென்னையில் இருந்து  நெல்லை திரும்பும்போது மாலை 5.32 முதல் 5.34  வரையும் விருத்தா சலத்தில் நிற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்பாக்கம்: புதிய இயக்குநர் பதவியேற்பு

சென்னை: கல்பாக் கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக ஸ்ரீகுமார் பிள்ளை இன்று பதவியேற்றுள்ளார். முந்தைய இயக்குநர் சி.ஜி. கர்ஹாத்கர் ஓய்வு பெற்றார். கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் வேதியியல் பொறியிய லில் பட்டம் பெற்ற ஸ்ரீ குமார் பிள்ளை, 1990  மும்பையில் உள்ள பாபா  அணு ஆராய்ச்சி மையத் தில் சேர்ந்து 35 ஆண்டுகள்  பல்வேறு பதவிகளில் பணியாற்றினார். செல வழித்த எரிபொருள் மறு சுழற்சி, கதிரியக்க கழிவு  மேலாண்மை, எரிபொ ருள் சுழற்சி செயல்பாடு கள், திட்ட மேலாண்மை மற்றும் பாதுகாப்பு மதிப் பீடுகளில் முப்பது ஆண்டு களுக்கு மேலான அனு பவம் பெற்றவர்.

அதிமுகவில்  10 ஆயிரம் பேர் விருப்ப மனு

சென்னை: அதிமுக சார்பில் சட்டமன்ற தேர்த லில் போட்டியிட 10 ஆயி ரத்து 075 பேர் விருப்ப  மனுக்களை சமர்ப்பித்து உள்ளனர். அதிமுக தலைமை வெளியிட்ட அறிக்கையில், தமிழ் நாடு, புதுச்சேரி, கேரள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட 10,175 விருப்ப  மனுக்கள் பெறப்பட்டு உள்ளதாகவும் இதில், பொதுச்செயலாளர் எடப் பாடி பழனிசாமி தங்களது  தொகுதியில் போட்டியிட வேண்டும் என 2,177 விருப்ப மனுக்கள் சமர்ப்பித்து ள்ளதாகவும் தெரிவிக்க ப்பட்டுள்ளது.