மதுரை, ஜன. 1 – பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப்ரவரி 17 முதல் காத்திருப்புப் போராட்டம் நடத்த தமிழ்நாடு நெடுஞ்சா லைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் முடிவு செய்து உள்ளது. மதுரையில் புதன்கிழமை நடைபெற்ற சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் இத்தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. மாநிலத் தலைவர் மா. பாலசுப்பிரமணியன் தலைமை யில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாநில நெடுஞ்சாலை ஆணையத்தைக் கலைத்து, நெடுஞ்சாலைத்துறையை அரசுத் துறையாகவே பாதுகாக்க வேண்டும் என வலி யுறுத்தப்பட்டது. மேலும், 41 மாத பணிநீக்க காலத்தைப் பணிக்காலமாக முறைப்படுத்த அரசாணை வெளியிட வேண்டும், சாலைப் பணியாளர்களுக்கு ரூ. 1,900 தர ஊதியம் வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன. இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 27-இல் மண்டல அளவில் பறையிசைப் போராட்டமும், பிப்ரவரி 11-இல் திருச்சியில் மாநில அளவிலான உரிமை மீட்பு மாநா டும் நடத்த தீர்மானிக்கப்பட்டது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை வலியுறுத்தி ஜனவரி 6-ஆம் தேதி முதல் நடைபெறும் ஜாக்டோ - ஜியோ போராட்டத்திலும் பங்கேற்பதென முடிவு செய்யப்பட்டது.