கரும்பு விவசாயிகள் சங்கம் கோரிக்கை
செங்கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகளிடம் இடைத்தரகர்கள் இன்றி அரசே நேரடியாகக் கொள்முதல் செய்து, பொங்கல் தொகுப்பில் மக்களுக்கு வழங்கிட வேண்டும் எனத் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. திருவண்ணாமலையில் நடைபெற்ற சங்கத்தின் மாநிலக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து, மாநிலப் பொதுச்செயலாளர் டி. ரவீந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை: நேரடி கொள்முதல் தமிழகம் முழுவதும் சுமார் 10,000 ஏக்கர் பரப்பளவில் செங் கரும்பு சாகுபடி செய்யப் பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை யை முன்னிட்டு வழங்கப்படும் பரிசுத் தொகுப்பிற்காக, விவசாயி களிடமிருந்து கரும்புகளை எவ்வித இடைத்தரகர்களுமின்றி அரசே நேரடியாகக் கொள்முதல் செய்ய வேண்டும்.
கரும்பு விலை ரூ.4,000
ஒன்றிய அரசு ஒரு டன் கரும்பு க்கு ரூ.3,290 மட்டுமே அறி வித்துள்ளது. இது விவசாயி களுக்குப் போதுமானதாக இல்லை. எனவே, தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் அளித்த படி, ஒரு டன்னுக்கு ரூ.710 கூடு தலாகச் சேர்த்து, கரும்பு விலை யாக ரூ.4,000 வழங்கிட நட வடிக்கை எடுக்க வேண்டும்.
ரூ.1,217 கோடி நிலுவைத் தொகை
கடந்த 2013 முதல் 2017 வரையி லான காலகட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய பரிந்துரை விலை (SAP) நிலுவைத் தொகை ரூ.1,217 கோடி இன்னும் விவசாயிகளுக்கு வந்து சேரவில்லை. இந்த நிலுவை தொகையைத் தனியார் ஆலைகளி டமிருந்து சட்டரீதியாகப் பெற்றுத்தர மாநில அரசு முன்வர வேண்டும். மாநிலத் தலைவர் எஸ். வேல்மாறன் தலைமையில் நடை பெற்ற இக்கூட்டத்தில், மாநிலப் பொருளாளர் சி. பெருமாள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், சர்க்கரை ஆலை சங்கப் பிரதிநிதிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.