tamilnadu

img

தென் மாவட்டங்கள் செல்லும் ரயில்களின் வேகம் அதிகரிப்பு

சென்னை, ஜன. 1 - தெற்கு ரயில்வேக்கான புதிய கால அட்ட வணை நடைமுறைக்கு வந்துள்ளது. இதில், மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கான நேரம் மாற்றப்பட்டுள்ளது. செங்கோட்டை - சென்னை எழும்பூர் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கமான நேரத்தை விட 20 நிமிடம் முன்னதாகவும், சென்னை எழும்பூர்- குருவாயூர் 20 நிமிடம் முன்னதாக செல்லும் வகை யிலும் வேகம் அதிகரிக்கப்பட உள்ளது. கொல்லம் -  தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயில் 85 நிமிடம் முன்ன தாக செல்லும் வகையிலும், கோவை - இராமேசு வரம் ரயில் 55 நிமிடம் முன்னதாக செல்லும் வகை யிலும் வேகம் அதிகரிக்கப்பட உள்ளது. நாகர்கோவில் - தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயில்  45 நிமிடம் முன்னதாகவும், தூத்துக்குடி - சென்னை  எழும்பூர் முத்துநகர் எக்ஸ்பிரஸ் 30 நிமிடம் முன்ன தாகவும், சென்னை எழும்பூர் - செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் 10 நிமிடம் முன்னதாகவும்  சென்றடையும் வகையில் வேகம் அதிகரிக்கப்பட உள்ளது. இதேபோல், நெல்லை - செங்கோட்டை பயணிகள் ரயில் 35 நிமிடம் முன்னதாகவும், மதுரை - இராமேசுவரம் பயணிகள் ரயில் 15 நிமிடம் முன்னதாகவும் செல்லும் வகையில் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணி களின் பயண நேரத்தைச் சேமிக்க முடியும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.