பேரவைக் கூட்டம் நடை பெறுகிறது. இந்த கூட்டத்திற்கு பிறகு, நல்ல முடிவு எட்டப்படும்” என்றார். தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்வி களுக்கு பதில் அளித்த அவர், “சங்கத்தைப் பதிவு செய்யும் விவ காரம் நீதிமன்றத்தில் உள்ளது. எனவே. அந்த தீர்ப்புக்கு நாங்கள் கட்டுப்படுவோம் என்று ஏற்கெனவே அறிவித்துவிட்டோம். அதையே இப்போதும் சொல்கிறோம். மிக மிக முக்கிய மானது, நிர்வாகத்திற்கும் எங்கள் சங்கத்திற்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. பொறுப்பு இருக் கிறது. அதைத்தான் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரு கிறோம். சாம்சங் நிர்வாகம் ஆரம்பத்தில் இருந்து எதையும் ஒப்புக் கொள்ளாமல் இருந்தது. எங்கள் சங்கத்துடன் பேசவே மறுத்து வந்தனர். ஆனால், அமைச்சர்களின் அழுத்தம் மற்றும் மாநில அரசின் முயற்சி காரணமாக நாங்கள் முன்வைத்திருக்கும் சில கோரிக்கைகள் மீது செவி சாய்த்திருக்கிறார்கள். இதில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. எனவே, முதலமைச்சர் எடுத்த முயற்சிக்கு பாராட்டு தெரிவிக் கிறோம். சாம்சங் நிர்வாகம் எங்களுடன் பேச வேண்டும் என்று வலியுறுத்தினோம். தற்போது, எங்களோடு என்ன பேச வேண்டும் என்பதுகுறித்து சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. இதில் சுமூக உடன்பாடு எட்டப் படும் என்று நாங்கள் நம்பு கிறோம். நாங்கள் நடத்தும் பேரவை யில் எடுக்கும் முடிவை செய்தி யாளர்களுக்கு முறைப்படி அறி விப்போம்” என்றும் அவர் கூறி னார். “தொழிலாளர்கள் வேலைக்குச் செல்வது குறித்து பேர வைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப் படும். நாளை மறுநாள் கூட வேலைக்குச் செல்ல தொழிலா ளர்கள் தயாராக உள்ளனர். இதில் எந்த பிரச்சனையும் இல்லை” என் றும் அ.சவுந்தரராசன் தெரிவித் தார்.
அரசு அறிக்கை
இதற்கிடையில், அரசு சார்பில் வெளியிட்டிருக்கும் அறிக்கை யில், “சாம்சங் தொழிலாளர் போராட்டத்தை விரைந்து முடி வுக்கு கொண்டுவர நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற் பட்டுள்ளது. அதன்படி. தொழில் அமைதி மற்றும்பொது அமைதி காக்கும் வகையில் தொழி லாளர்கள் வேலை நிறுத்தத்தை உடனடியாக கைவிட்டு பணிக்குச் செல்ல வேண்டும். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழி லாளர்கள் மீண்டும் பணிக்கு திரும்பும் போது நிர்வாகம் எவ்வித பழிவாங்கும் நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது. வேலைநிறுத் தத்தைக் கைவிட்டு பணிக்கு திரும்பும் தொழிலாளர்கள் நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். மேலும் நிர்வாகத்திற்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது. தொழிலாளர்கள் முன்வைத்த ஊதிய உயர்வு மற்றும் பொது கோரிக்கையின் மீது நிர்வாகம் எழுத்துப்பூர்வமாக பதி லுரையை சமரச அலுவலர் முன்பு தாக்கல் செய்ய வேண்டும். இதனால், சாம்சங் தொழிற் சாலையில் நடைபெற்று வந்த வேலை நிறுத்த போராட்டம் முடி வுக்கு வந்தது, தொழிலாளர்கள் அனைவரும் பணிக்குத் திரும்ப உள்ளார்கள்” என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.