எஸ்ஐஆர் பணிகள் நிறைவு வரைவுப் பட்டியல் டிச.19 - வெளியீடு
சென்னை, டிச.14 - தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த நவம்பர் 4 ஆம் தேதி தொடங்கி டிச.14 (ஞாயிற்றுக் கிழமை) அன்றுடன் முடிவடைந்தன. இந்தப் பணியின்போது ஒவ்வொரு வாக்காள ருக்கும் வீடு வீடாகச் சென்று கணக்கீட்டு படி வங்களை வாக்குச்சாவடி நிலை அலு வலர்கள் வழங்கி வந்தனர். எஸ்.ஐ.ஆர். களப் பணிகள் முடிவடை யும் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இரண்டு முறை நீட்டிப்பு செய்து உத்தர விட்டது. தமிழகத்தில் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 6 கோடியே 41 லட்சத்து 13 ஆயிரத்து 772 பேருக்கு கணக்கீட்டு படிவங்கள் விநியோ கம் செய்யப்பட்டன. தொடர்ந்து, 6 கோடியே 41 லட்சத்து 13 ஆயிரத்து 221 கணக்கீட்டுப் படிவங்கள் திரும்பப் பெறப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டன. இதில், உயிரிழந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள், கண்டுபிடிக்க முடியா தவர்கள், இரட்டைப் பதிவு வாக்காளர் கள் என மொத்தம் 80 லட்சத்துக்கும் அதிக மானோர் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களின் உண்மைத் தன்மையை கள ஆய்வு செய்து பட்டியலில் இணைக்கலாம் என தேர்தல் ஆணையம் முடிவு செய்து, வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனிடையே, வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிப்பை மேற்பார்வையிட தேர்தல் ஆணையத்தின் சிறப்பு பார்வை யாளர்களான ராமன் குமார், குல்தீப் நாரா யண், விஜய் நெஹ்ரா, நீரஜ் கர்வால் ஆகி யோர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங் களில் களஆய்வில் சனிக்கிழமை ஈடுபட்டனர். அப்போது, தொடர்பு கொள்ள முடியாத வர்கள், முகவரியில் இல்லாத வாக்காளர் கள், இடம் பெயர்ந்தவர்கள், இரட்டைப் பதிவு என கணக்கீட்டுப் படிவங்களில் குறிக்கப் பட்ட வாக்காளர்களின் படிவங்கள் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருவது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 19 ஆம் தேதி வெளியிட்ட பின்னர், அது குறித்த மேல்முறையீட்டை அடுத்த ஆண்டு ஜனவரி 18 ஆம் தேதி வரை வாக்காளர்கள் அளிக்கலாம். இறுதி வாக்கா ளர் பட்டியல் பிப்ரவரி 17 ஆம் தேதி வெளி யிடப்படும். வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்களை 100 சதவீதம் வழங்கி, அவற்றை திரும்பப் பெற்று, அவை முழுவதையும் வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் ஏற்கனவே பதிவேற்றம் செய்து விட்டனர். இந்த பதிவுகளின் அடிப்படையில் வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப் பட்டு டிசம்பர் 19 ஆம் தேதி வெளியிடப்படு கிறது. பின்னர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கும், திருத்தங்களை மேற்கொள் வதற்கும் ஒரு மாத கால அளவுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. பிப்ரவரி மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப் படும்.