tamilnadu

img

கட்சி, வாக்குகளை திருடியதை போல நிலத்தையும் பாஜக, கூட்டணிக் கட்சியினர் திருட ஆரம்பித்து விட்டனர் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே சரமாரி குற்றச்சாட்டு

கட்சி, வாக்குகளை திருடியதை போல நிலத்தையும் பாஜக, கூட்டணிக் கட்சியினர் திருட ஆரம்பித்து விட்டனர் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே சரமாரி குற்றச்சாட்டு\

மும்பை கட்சி, வாக்குகளை திருடியதை போல நிலத்தையும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினர் திருட ஆரம்பித்து விட்டனர் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே குற்றம்சாட்டியுள்ளார். மகாராஷ்டிராவில் கனமழையால் உருக் குலைந்த மராத்வாடா பிராந்தியத்தில் விவசாயி களை சந்திக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் உத்தவ் தாக்கரே பர்பானியில் செய்தியா ளளை சந்தித்தார். அப்போது மேலும்  கூறுகை யில், “கனமழையால் மராத்வாடா பிராந்தியம் 100 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு பாதிக்கப் பட்டுள்ளது.  பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி மற்றும் இழப்பீட்டை ஒன்றிய மற்றும் மாநில பாஜக அரசுகள் வழங்க வேண்டும். ஆனால் மகாராஷ்டிரா பாஜக முத லமைச்சர் பட்னாவிஸ் பீகார் தேர்தல் சுற்றுப் பயணத்தில் உள்ளார். அதனால் அவருக்கு விவ சாயிகளை கண்டுகொள்ள நேரம் இல்லை.  குறிப்பாக முன்பு பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர், இரண்டாக உடைத்து (சிவசேனா, தேசியவாத காங்கிரஸ்) கட்சியை திருடினர். பின்பு வாக்குகளைத் திருடினர். வாக்குத் திருட்டு தொடர்ச்சியாக உள்ள சூழலில், தற்போது நிலத்தையும் திருட (அஜித் பவார் மகன் நில ஊழல்) ஆரம்பித்து விட்டனர். அதனால் மகாராஷ்டிரா பாஜக கூட்டணி அரசாங்கத்தின் மோசடி மற்றும் போலி நிர்வா கத்திற்கு எதிராக விவசாயிகள் அணி திரள வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்தார்.

ரூ.1,804 கோடி நில ஊழலில் பாஜக, மோடி அரசுக்கும் நேரடி தொடர்பு?

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே கோரேகான் பார்க் முந்த்வாவில் 40 ஏக்கர் நிலம் உள்ளது. இது ஒன்றிய அரசுக்கு சொந்தமான நிலம் ஆகும். இந்த நிலம் பட்டி யலின “மஹர்” சமூகத்திற்கு வழங்கப்பட்ட “வடன்” பிரிவின் கீழ் உள்ளது. “மஹர்” நிலத்தை யாரும் வாங்க, விற்க முடியாது. ஆனால் மகா ராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் அதிகாரத்தை பயன்படுத்தி தனது மகனுக்கு (பார்த் பவார்) அடிமாட்டு விலைக்கு (நிலத்தின் மதிப்பு ரூ.1804 கோடி. வாங்கியது வெறும் ரூ.300 கோடி) வாங்கி கொடுத்தார். இந்நிலையில், இந்த மெகா ஊழலில் அஜித் பவாருக்கு மட்டுமின்றி பாஜக, மோடி அரசுக்கும் நேரடி தொடர்பு இருப்ப தாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஒன்றிய அரசின் கட்டுப் பாட்டில் உள்ள “மஹர்” நிலத்தை அஜித் பவாரின் மகன் பார்த் பவாரின் அமேடியா நிறுவனத்திற்கு விற்றவர் ஷீத்தல் தேஜ்வானி. நிலத்தை அரசாங்கத்திட மிருந்து விடுவித்து விற்க, 272 போலி உரிமையாளர்களைத் தயார் செய்து ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை பெயரளவு பத்திரக் கட்டணமாக செலுத்தியுள்ளார். இதற்கு அரசு வழக்கறிஞர் பெரும் உதவி செய்துள்ளார். தேஜ்வானியின் கணவர் சாகர் சூர்யவன்ஷி வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டவர். அவரை அமலாக்கத்துறை விசாரித்தது. இருப்பினும் அஜித் பவார்  மகனின் நில ஊழல் வழக்கில் ஷீத்தல் தேஜ்வானி பெயர் இதுவரை அடிபடவில்லை.