tamilnadu

img

பாலியல் வன்கொடுமை  பள்ளி இயக்குநரான  சாமியார் தலைமறைவு

பாலியல் வன்கொடுமை  பள்ளி இயக்குநரான  சாமியார் தலைமறைவு

தில்லியின் வசந்த் கஞ்ச் பகுதியில் உள்ள கல்வி நிறுவனத்தின் இயக்குநரும் சாமியாருமான சைதன்யானந்த சரஸ்வதி என்கிற பார்த்த சாரதி பல மாணவிகளை பாலியல் துன் புறுத்தல் செய்ததாக காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்நிலை யில் அவர் தற்போது தலைமறைவாகி உள்ளார். பார்த்தசாரதி மீது ஆகஸ்ட் 4 அன்று பதினேழு மாணவிகள் பாலி யல் துன்புறுத்தல், ஆபாசமாக பேசுவது, வாட்ஸ்அப்/எஸ்எம்எஸ் இல் ஆபாச மான உரையாடல் அனுப்பியது குறித்து புகார்கள் தெரிவித்துள்ளனர். அந்த கல்வி நிறுவன ஆசிரியர்களும், நிர்வாகிகளும் மாணவிகளை பார்த்தசார தியின் வன்கொடுமைக்கு உதவி செய்த தாகவும் அதற்காக மாணவிகளை வற் புறுத்தியதாகவும் மாணவிகள் குறிப் பிட்டுள்ளனர்.