tamilnadu

img

அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள், பாபர் மசூதி தகர்ப்பு நாள் கருத்தரங்கு

அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள்,  பாபர் மசூதி தகர்ப்பு நாள் கருத்தரங்கு

தஞ்சாவூரில் டிச.6 ஆம் தேதி சனிக்கிழமை காலை தமுஎகச மாநாட்டு முதல் நிகழ்ச்சியாக, நாகூர் சூஃபி பாடகர் ஹாஜா பாவா கலைக்குழு வின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து,  சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கரின் அலங்கரிக்கப்பட்ட திருவுருவப் படத்துக்கு நீதிபதி கி.சந்துரு உள்ளிட்ட தலை வர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.  பின்னர், அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள், பாபர் மசூதி தகர்ப்பு நாள் கருத்தரங்கம் நடை பெற்றது. இதில், கவிஞர் நா.முத்துநிலவன் தலைமை வகித்துப் பேசினார். சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி கி.சந்துரு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். வரவேற்புக்குழு தலைவரும், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பி னருமான ச.முரசொலி வரவேற்புரையாற்றி னார். நிகழ்ச்சியை, அ.செந்தில்குமார், ரித்திகா, ராசி பன்னீர்செல்வம் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.  நிகழ்ச்சியில், எழுத்தாளர் எஸ்.ஏ.பெருமாள், பேராசிரியர் அருணன், தமுஎகச மாநிலத் தலை வர் மதுக்கூர் இராமலிங்கம், பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா, துணை பொதுச் செயலா ளர் கவிஞர் களப்பிரன்,  சட்டமன்ற உறுப்பி னர்கள் துரை.சந்திரசேகரன் (திருவையாறு), நா.அசோக்குமார் (பேராவூரணி), தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.