திருப்பரங்குன்றம் தீப சர்ச்சை : மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் சதி
திருப்பரங்குன்றம் இன்று ஒரு விவாத மையமாக மாறியிருக்கிறது. கார்த்திகை தீபத் திருநாளில் அங்கு ஏற்றப்படும் தீபம் சம்பந்தப்பட்ட விவகாரமே அடிப்படையாக அமைந்துள் ளது. தீபம் ஏற்றும் விவகாரத்தில் கோவில் நிர்வாகமும், தமிழ்நாடு அரசும் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த தவறி விட்டதாகக் கூறி, பாஜகவும், அதிமுகவும் தீவிரப் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. இந்தப் பிரச்சனைக்குப் பின்னால் உள்ள அரசியல் சதிவலையை தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டியது அவசி யமானதாகும். பின்னணியில் உள்ள மதவெறி அரசியல் சதி திருப்பரங்குன்றத்தில் நடக்கும் இந்த விவகாரம் ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல.
பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் மதவெறி அமைப்புகள் நாடு முழுவதும் உள்ள கோவில், தர்கா, மசூதி போன்ற வழி பாட்டுத் தலங்களில் வேண்டுமென்றே பிரச்சனைகளை உருவாக்கி, அரசியல் பதற்றத்தையும் மத மோதலையும் கிளப்பி வருகின்றன. இதன்மூலம் அரசியல் ஆதாயம் தேடி, ஆட்சி மாற்றத்தை உரு வாக்குவதையே இலக்காகக் கொண்டுள்ளன. பல நூற்றாண்டுகளுக்கு முன் கட்டப் பட்ட பாபர் மசூதியை இடித்துவிட்டு ராமர் கோவில் கட்டும் பிரச்சனையை மையப் படுத்தி இந்தியாவில் பாஜக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது அனைவரும் அறிந்ததே. அதேபோல, தற்போது கிருஷ்ண ஜென்மபூமி என்பது உள்ளிட்ட பெயர்களில் பல இடங்களில் இதே போன்ற சர்ச்சைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. வழிபாட்டுத் தலங்களை அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்தும் இந்தக் கேடுகெட்ட காரியத்தைத் தொடர்ந்து அவர்கள் செய்து வருகிறார்கள். இப்பணி க்கு நீதிமன்றங்களையும் பயன்படுத்தும் ஆபத்தான போக்கு அதிகரித்துக் கொண் டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, தமிழ கத்தை மதக்கலவர பிரதேசமாக மாற்ற திருப்பரங்குன்ற தீப பிரச்சனையை கையிலெடுத்துள்ளனர். ஆறுபடை வீடுகளுள் ஒன்றான திருப்பரங்குன் றத்தில் முருகனின் சன்னிதானமும் அதற்கு சற்று மேலே இஸ்லாமிய மக்கள் வழிபடக் கூடிய சிக்கந்தர் தர்காவும் அமைந்துள்ளது. திருப்பரங்குன்றம் சிறந்த மத நல்லிணக்கத்திற்கு முன்னு தாரணமான தலமாகும். இதனை கலவரப் பிரதேசமாக மாற்றுவதே இந்துத்துவா சக்திகளின் உள்நோக்கமாகும். இதேபோன்று, திண்டுக்கல் மாவட் டத்தில் உள்ள அபிராமி அம்மன் கோவில் பிரச்சனையை மையப்படுத்தி பதற்றத்தை உருவாக்க முயற்சிக்கின் றனர். இது நாளடைவில் தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தும் ஆபத்தான நோக்கம் கொண்டதாகும். தவறான பிரச்சாரமும் உண்மையும் பாஜகவும், அதிமுகவும் மற்றும் மத வெறி அமைப்புகளும் மேற்கொண்டுள்ள பிரச்சாரத்தில் எந்த அளவு உண்மை யுள்ளது என்பதை சீர்தூக்கிப் பார்க்க வேண்டியது அனைவரின் கடமையாகும். கார்த்திகை தீபத் திருநாளில் தமிழ கத்தின் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசிக்கும் வகையில் ஏராளமான இடங்களில் தீபங்கள் ஏற்றப்பட்டுள்ளன. இதே திருப்பரங்குன்றத்திலும் வழக்க மான இடத்தில் தீபம் ஏற்றப்பட்டு, பல்லா யிரக்கணக்கான மக்கள் வந்து வழிபட்ட சம்பவத்தை தமிழகமே கண்டுள்ளது.
பிரச்சனை தீபம் ஏற்றுவதல்ல, மாறாக தீபம் ஏற்றும் இடத்தை மாற்றுவதுதான். பல நூற்றாண்டுகளாக ஏற்றப்பட்டு வந்த இடத்தை மாற்றி, ஒரு புதிய இடத்தில் தீபத்தை ஏற்ற வேண்டும் என்றுதான் பாஜகவும் இந்துத்துவா அமைப்புகளும் பிரச்சனை செய்து வருகின்றன. நீண்டகால சட்டப் போராட்டமும் நீதிமன்றத் தீர்ப்புகளும் தீபம் ஏற்றும் இடத்தை மாற்றுவது குறித்த கோரிக்கை தொடர்ந்து நீதிமன் றங்களில் வழக்கு தொடரப்பட்டு வந்தது. 1996 ஆம் ஆண்டு வழக்கு: Fஇப்பிரச்சனை தொடர்பாக 1996-ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொட ரப்பட்டபோது, அன்றைய தமிழக முதல மைச்சர் ஜெயலலிதா அவர்களையும் எதிர்மனுதாரராகச் சேர்த்திருந்தனர். Fமுதலமைச்சர் ஜெயலலிதா சார்பிலும், அரசின் சார்பிலும் தாக்கல் செய்யப் பட்ட பதில் மனுவில், “இந்தக் கோரிக்கை நியாயமற்றது, ஏற்க முடியாதது. வழக்கமான இடத்தை மாற்ற வேண்டிய அவசியம் ஏன் என்று மனு தாரர் விளக்கவில்லை. அது ஆகம விதி களுக்குப் புறம்பானது என்பதையும் மனுதாரரால் நிரூபிக்க முடியவில்லை. எனவே, வழக்கமான இடத்திலேயே தீபத்தை ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். மனுதாரரின் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுமென” வலி யுறுத்தப்பட்டது. F இந்த வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. F குறிப்பாக, உச்சியில் கொண்டுபோய் தீபம் ஏற்றுவது, அங்குள்ள சிக்கந்தர் தர்காவுக்கு பக்கத்தில் அமைவதால், மத மோதலுக்கு வித்திடும் என்று கூறி, மத நல்லிணக்கம் பாதிக்கப்படக் கூடாது என்ற அடிப்படையிலும் நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்தார்.
2014 மற்றும் 2016 வழக்குகள் F 2014-இல் மீண்டும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அப் போதும் ஜெயலலிதாவே முதல மைச்சராக இருந்தார். இந்து அறநிலை யத்துறையும் மாவட்ட ஆட்சியரும் “இந்தக் கோரிக்கை அவசியமற்றது, உள்நோக்கத்தோடு சொல்லப்படு கிறது” என்று கூறி, மனுவைத் தள்ளுபடி செய்யக் கோரினர். தனி நீதிபதியும் வழக்கை தள்ளுபடி செய்தார். F மனுதாரர் மேல்முறையீடு செய்த போது, இரண்டு நீதிபதிகள் அமர்வும் “தீபம் ஏற்றும் இடத்தை மாற்றுவதற்கு எந்த அவசியமும் இல்லை” என்று கூறி, வழக்கை மீண்டும் தள்ளுபடி செய்தனர்.
F 2017-லும் இதேபோன்ற கோரிக்கை உயர்நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டது. அதாவது, 1996 முதல் 2017 வரை தொ டர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக, அதிமுக ஆட்சியிலேயே இந்த கோரிக்கை நியாயமற்றது என்று கூறி நீதிமன்றங்க ளால் தள்ளுபடி செய்யப்பட்டு வந்துள் ளது. ஜி.ஆர். சுவாமிநாதனின் சர்ச்சைக்குரிய உத்தரவு இந்தச் சூழ்நிலையில், 2025-இல் ராம. ரவிக்குமார் என்பவர் மீண்டும் அதே கோரிக்கையை முன்வைத்து வழக்கு தொடுத்துள்ளார். நீதிபதி ஜி.ஆர். சுவாமி நாதன் இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டதுடன் நேரடியாக மலைக்குச் சென்று ஆய்வு நடத்தி ஒரு உத்தரவை வெளியிட்டார். Fகார்த்திகை தீபத் திருநாள் அன்று (3.12.2025) மாலை 6:00 முதல் 7:00 மணிக் குள், புதியதாகக் கோரப்பட்ட ‘தீபத் தூணில்’ தீபத்தை ஏற்ற வேண்டும் என்று அவசர அவசரமாக டிசம்பர் 1ஆம் தேதி மாலை 6:00 மணிக்கு உத்தர விட்டார். F உண்மையில், அவர் தீபத் தூண் என்று குறிப்பிட்டது, பிரிட்டிஷ் ஆட்சியா ளர்கள் மலைகளை அளக்கப் பயன் படுத்திய ஒரு அளவைக் கல்லே ஆகும். இது வழிபாட்டுக்கு முற்றிலும் சம்பந்த மில்லாத கல்லாகும்.
F நீதிமன்ற வரலாற்றிலேயே இல்லாத வகையில், ஏற்கெனவே இரண்டு நீதிபதி கள் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்புக்கு எதிராக ஒரு தனி நீதிபதியின் தீர்ப்பு செல் லத்தக்கதா என்ற கேள்வி புறந்தள்ள முடியாததாகும். F இதனை தொடர்ந்து மனுதாரரால் சமர்ப்பிக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை அவசர கதியில் ஏற்றுக் கொண்டு அதன் மீது பிறப்பிக்கப்பட்ட உத்தரவும் பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது. Fஇந்த உத்தரவை செயல்படுத்தும் வகை யில் மத்திய தொழில் பாதுகாப்பு படை தலைமையில் மனுதாரர் திருப்பரங் குன்றம் மலை அடிவாரத்தை அடைந்த போது, ஆயிரக்கணக்கான நபர்கள் அழைத்து வரப்பட்டிருந்த நிலையில் ஏற்பட்ட பதற்றத்தை தணித்திட தமிழக காவல்துறை கடும் சிரமங்களுக்கு மத்தியில் பணியாற்றியுள்ளது.
Fநிலைமை மோசமாவதை உணர்ந்த தமிழக அரசு அவசர அவசரமாக தலைமை நீதிபதியிடம் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்து அம்மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில், திருப்பரங்குன்றத்தில் பதற்றம் தவிர்க்கப்பட்டது. F மீண்டும் அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பும் அதனைத் தொடர்ந்து தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பும் மேலும் பதற்றத்தை அதி கரித்த நிலையில், மதப் பதற்றத்தையும், மோதலையும் தவிர்க்கும் நோக் கோடு தமிழ்நாடு அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டுமனு தாக்கல் செய்யப்பட்டு, அம்மனு விசார ணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் மதுரை மாவட்டத்தில் தற்போது அமைதி நிலை பாதுகாக் கப்பட்டுள்ளது. இந்நிலையில் உயர்நீதிமன்ற உத்த ரவு அமல்படுத்தப்படவில்லை என்ற காரணத்தைக் கூறி உரிய அவகாசம் அளிக்காமல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு ஏற்றதும் உடன டியாக நீதிமன்ற பாதுகாப்புப் பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படை யின் பாதுகாப்போடு மனுதாரரே நேரில் சென்று “அந்தத் தூணில்” தீபத்தை ஏற்ற வேண்டுமென பிறப்பிக்கப்பட்ட உத்த ரவும், அதனைத் தொடர்ந்து அரசின் மேல் முறையீட்டினை விசாரித்த இரு நீதிபதி கள் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தர வுகளும்
இயற்கை நீதிக்கு பொருத்தமான வைகளா என்ற கேள்விகளை எழுப்பி யுள்ளது. இந்த உத்தரவுகள் செயல் படுத்தப்பட்டிருக்குமானால் திருப்பரங் குன்றத்தில் மோசமான மோதல்களும், கலவரங்களும் வெடித்திருக்க வாய்ப்ப ளித்திருக்கும் என்பதில் ஐயமில்லை. தமிழக அரசின் பாராட்டத்தக்க தலையீடுகள் நீதிமன்ற உத்தரவுகளால் ஏற்பட்ட கவலையளிக்கும் நிலைமையினை கவ னத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு முதல்நாள் சென்னை உயர்நீதிமன்றத்தி லும், அடுத்த நாள் அவசரமாக உச்ச நீதிமன்றத்திலும் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தது மிகுந்த பாராட்டுக்குரிய நடவடிக்கைகளாகும். அர சின் இந்நடவடிக்கைகளே மதுரை மாவட் டத்தில் ஏற்படவிருந்த பதற்றம் மற்றும் மோதல்கள் ஏற்படாமலும் அமைதிச் சூழல் மற்றும் மக்கள் ஒற்றுமையைப் பாதுகாப்ப தற்கும் பெரிதும் உதவியுள்ளது. அதிமுகவின் இரட்டை வேடம் இப்பிரச்சனையில் மதவெறி பாஜக வோடு கூட்டணி சேர்ந்துள்ள அதிமுக வின் தலைவர் எடப்பாடி பழனிசாமி இரட்டை வேடதாரியாக மாறியுள்ளார் என்பது வெள்ளிடை மலை.
F 1996, 2014, 2017 ஆகிய ஆண்டுகளில் ஜெயலலிதாவும் எடப்பாடி பழனிசாமி யின் ஆட்சியும் தீபத்தை வேறு இடத்தில் ஏற்ற வேண்டுமென்ற கோரிக்கையை எதிர்த்து, இது “நியாயமற்றது, ஏற்க முடியாது” என்று நீதிமன்றத்தில் எதிர்மனு தாக்கல் செய்தன.
Fஅன்றைக்கு எதையெல்லாம் ஏற்க மாட்டோம் என்று அ.தி.மு.க. சொன்ன தோ, இன்று அதற்கு நேர் விரோத மாகச் செயல்பட்டு, இந்தத் தீர்ப்பை அமலாக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி பேசுவது என்ன நியாயம்? F பாஜகவோடு கூட்டணி சேர்ந்ததால், அதிமுகவின் கொள்கைகளைக் கைவிட்டு பாஜகவின் ஊதுகுழலாகவே எடப்பாடி பழனிசாமி மாறியுள்ளார் என்பது நிதர்சனமாகியுள்ளது. இன்றைக்கு அமைதியாக இருக்கும் தமிழ்நாட்டில், மத நல்லிணக்கத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு மத்தியில், இல்லாத பிரச்சனைகளை கிளப்பி, மத மோதலையும் பதற்றத்தை யும் உருவாக்குவதில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. ஒரு சிறிய வாய்ப்பு கிடைத் தாலும் அதை ஊதிப் பெரிதாக்கி, தமிழ் நாட்டைக் கலவர பூமியாக மாற்றுவதையே இந்துத்வா சக்திகள் இலக்காகக் கொண்டுள்ளனர். நீதிபதியாக நீடிக்கத் தகுதியானவரா? இந்தச் சூழலில், நீதிமன்றத் தீர்ப்புக ளும் அவர்களுக்கு துணைபோகிற நிலைமை ஏற்பட்டுள்ளது என்பது கவலை யளிக்கிறது.
குறிப்பாக, நீதிபதி பணியில் உள்ள ஜி.ஆர். சுவாமிநாதனின் தீர்ப்புகள் அவர் உயர்நீதிமன்ற நீதிபதியாக நீடிப்ப தற்கு தகுதியானவரா என்று கேள்வி களை எழுப்பியுள்ளது. இந்த தீர்ப்புகள் குறித்தும் அதற்கு காரணமான ஜி.ஆர். சுவாமிநாதன் மீதும் முழுமையான விசார ணை நடத்திட வேண்டுமெனவும் அவரை நீதிபதி பொறுப்பிலிருந்து விடுவிக்க வேண்டுமெனவும் தலைமை நீதிபதிக்கு சிபிஐ(எம்) சார்பில் குரலெழுப்ப உள் ளோம். இதற்கு வலுச் சேர்க்கிற முறை யில் மதச்சார்பற்ற கட்சிகள் மற்றும் இயக்கங்கள் அணி சேர்ந்திட வேண்டும்.
ஆர்.எஸ்.எஸ். - பாஜகவின் வெறுப்பு அரசியலுக்கு ஒருபோதும் தமிழக மக்கள் இடமளிக்க மாட்டார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாகவே திருப்பரங்குன்றம் பகுதியில் வாழும் பொதுமக்கள் அமைதி காத்துள்ளனர். “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற பாரம்பரிய முற் போக்குப் பண்பாடு கொண்ட தமிழக மக்க ளின் இத்தகைய உணர்வுக்கு விரோத மாக செயல்படும் ஆர்.எஸ்.எஸ், பாஜக மற்றும் மதவெறி அமைப்புகளுக்கும், அவர்களோடு அணி சேர்ந்துள்ளோ ருக்கும் உரிய பாடத்தை தமிழக மக்கள் புகட்டுவார்கள் என்பது திண்ணம்.
