ஊரக வேலை உறுதித் திட்டம் கூலியை ரூ.400 உயர்த்தும் நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரையை நிராகரித்த மோடி அரசு
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (MGNREGS) கீழ் தினக்கூலியை ₹400 ஆக உயர்த்தும் நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரையை ஒன்றிய அரசு நிராகரித்தி ருப்பதும், நாடு முழுவதும் பல நூறு கோடி ரூபாய் ஊதியப் பாக்கி நிலுவையில் இருப்பதும் கிராமப்புறத் தொழிலாளர்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளதாக திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக தான் எழுப்பியிருந்த கேள்விக்கு ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சர் ஸ்ரீ கம்லேஷ் பாஸ்வான் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்களுக்கு எதிர்வினையாற்றி யுள்ள சச்சிதானந்தம் எம்.பி., கூலி உயர்வு தொடர்பான அரசின் முடிவையும், ஊதியப் பாக்கி நிலுவையையும் கடுமையாகச் சாடியுள்ளார். பணவீக்கக் குறியீடு போதாது தினக்கூலியை ₹400 ஆக உயர்த்த வேண்டும் என்ற நிலைக்குழுவின் பரிந்துரை யை ஒன்றிய அரசு ஏற்க மறுத்து, ஊதிய விகி தத்தை நுகர்வோர் விலைக் குறியீட்டின் (விவ சாயத் தொழிலாளர்கள்) (CPI-AL) அடிப்படை யில் மட்டுமே ஆண்டுதோறும் திருத்தி அமைப் போம் என்று அறிவித்துள்ளது. இந்த முறை யின் கீழ், கடந்த ஐந்து ஆண்டுகளில் சராசரி யாக 29% மட்டுமே ஊதிய உயர்வு அளிக்கப் பட்டுள்ளதாக அமைச்சர் பதிலில் தெரிவித்துள்ளார். இந்த அரசின் நிலைப்பாடு குறித்து விமர் சித்த சச்சிதானந்தம் எம்.பி., வெறும் பண வீக்கக் குறியீட்டை மட்டும் அடிப்படையாகக் கொண்டு ஊதியத்தை உயர்த்துவது, கிரா மப்புற ஏழை மக்களின் உண்மையான வாழ் வாதாரச் செலவைப் பூர்த்தி செய்யப் போதாது என்று சுட்டிக்காட்டினார்.இது கிராமப்புற ஏழைத் தொழிலாளர்களின் அத்தியாவசி யத் தேவைகளைக் கவனத்தில் கொள்ளாத முடிவாக உள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். ஊதியத் தாமதம்: திட்டத்தின் நோக்கம் சிதைவு ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், பணி முடிந்த 15 நாட்களுக்குள் பயனாளிக ளுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று சட்டம் தெளிவாகக் கூறுகிறது. ஒருவேளை தாமதமானால், 16வது நாள் முதல் நிலுவையில் உள்ள ஊதியத்தில் நாள் ஒன்றுக்கு 0.05% என்ற விகிதத்தில் இழப்பீடு வழங்கவும் சட்டம் வழி வகுக்கிறது. ஆனால், இந்தச் சட்ட விதிகள் இருந்த போதிலும், 2025 நவம்பர் 26 நிலவரப்படி, இத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ₹1,687.27 கோடி ஊதியப் பாக்கி நிலுவையில் உள்ளது. இதில் ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம், கேரளா மற்றும் தமிழ்நாடு (₹111.54 கோடி) போன்ற மாநிலங்களில் பல நூறு கோடி ரூபாய் நிலுவையில் உள்ளதாகவும் அமைச்ச ரின் பதில் மூலம் தெரியவந்துள்ளது. இவ்வளவு பெரிய தொகைகள் ஊதியப் பாக்கியாக நிலுவையில் இருப்பது குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்த எம்.பி. சச்சிதா னந்தம், “சட்டப்படி 15 நாட்களுக்குள் ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறும் நிலையில், பல நூறு கோடி ரூபாய் ஊதியப் பாக்கி நிலுவையில் இருப்பது, கிராமப்புற ஏழைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பை நேரடியாகப் பாதிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இத்திட்டத்தின் முக்கியமான நோக்கம், கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை வழங்கி நெருக்கடி இடம் பெயர்வைத் (distress migration) தடுப்பது தான். ஆனால், ஊதியத்தை வழங்க ஏற் பட்டிருக்கும் இந்தக் கடுமையான தாமதம், திட்டத்தின் அடிப்படையான நோக்கத்தையே கேள்விக்குறியாக்கி, கிராமப்புறத் தொழி லாளர்களை வேறு வழியின்றி இடம்பெயரச் செய்யும் நிலைக்கே தள்ளுகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார். இந்த இரண்டு முக்கிய காரணிகளால் – தினக்கூலி உயர்வு இல்லை மற்றும் ஊதியப் பாக்கி நிலுவை – கிராமப்புற ஏழை மக்களின் பொருளாதார நெருக்கடிக்கு ஒன்றிய அரசு உரிய கவனம் செலுத்தவில்லை என்ற விமர் சனத்தை ஆர். சச்சிதானந்தம் எம்.பி. முன் வைத்துள்ளார்.
