இந்துத்துவா பயங்கரவாதிகளைப் புறக்கணிப்போம்: தமிழக அமைதியைப் பாதுகாப்போம்!
பெ. சண்முகம் அழைப்பு
சென்னை, டிச. 6 - தமிழகத்தின் அமைதியையும் மத நல்லிணக்கத்தையும் பாது காப்பதற்காக அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் அறைகூவல் விடுத்துள்ளார். சங்பரி வார் கும்பலால் பாபர் மசூதி இடிக்கப் பட்ட டிசம்பர் 6-ஆம் நாளை ‘பயங்கர வாத எதிர்ப்பு தினமாக’ தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமுமுக) கடைப்பிடித்தது. இதை முன்னிட்டு, மக்களின் வாழ்வுரிமை, வாக்குரிமை மற்றும் வழிபாட்டு உரி மையை வலியுறுத்தி சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அவர் உரையாற்றினார். மதச்சார்பின்மை மீது தாக்குதல் தமது உரையில், மதச்சார்பின்மைக் கோட்பாட்டின் மீது இந்துத்துவா கும்பல் கடப்பாரையை இறக்கிய நாள் டிசம்பர் 6 என பெ. சண்முகம் குறிப் பிட்டார். உச்சநீதிமன்றத்தின் உத்த ரவை மதிக்காமல் பாபர் மசூதியை இடித்த இந்துத்துவா மதவெறிக் கும்பலின் செயல், நீதிமன்றத் தீர்ப்பை மீறிய செயல் என்பதை அவர் வலி யுறுத்தினார். அவர் திருப்பரங்குன்றம் வழக்கை சுட்டிக்காட்டி, நீதிமன்றத் தீர்ப்புகள் மீறப்படுவது குறித்து ஒப்பிட்டார். உத்த ரப்பிரதேசத்தில் மசூதியை இடிப்ப தற்காக நீதிமன்றத் தீர்ப்பு மீறப்பட்டது என்றும், திருப்பரங்குன்றத்தில் சிக்கந்தர் தர்காவைப் பாதுகாப்ப தற்காகத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறை யீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். தீர்ப்பை விமர்சிக்கும் உரிமை “நீதிமன்றத் தீர்ப்பை விமர்சிக்கக் கூடாது என்று உத்தரவிடுவது, அரசிய லமைப்புச் சாசனம் வழங்கியுள்ள கருத்துரிமை மீதான தாக்குதல்” என்று பெ. சண்முகம் குற்றம் சாட்டினார். நீதி பதிகள் தவறான தீர்ப்பை அளித்தால், அதனை விமர்சிக்காமல் இருக்க முடியாது என்றும், உச்ச நீதிமன்றமும் தீர்ப்பை விமர்சிக்கலாம் என்று மீண்டும் மீண்டும் கூறியுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார். எனவே, அரசி யலமைப்புச் சாசனத்தின் மீதான தாக்குதலைத் தடுக்க அனைவரும் திரள வேண்டும் என்றும் அவர் அறை கூவல் விடுத்தார். மேலும், இந்தியத் தேர்தல் ஆணை யம் வாக்குரிமை பெற்றவர்களை எஸ்ஐஆர் (SIR) என்ற பெயரில் நீக்க நடவடிக்கை எடுத்துவரும் வழக்கு களை உச்ச நீதிமன்றம் மாதக்கணக் கில் நடத்துவதையும், ஆனால் தீபம் ஏற்றுவது போன்ற வழக்குகளை உயர் நீதிமன்றம் சில நிமிடங்களில் விசாரித்து உத்தரவிடுவதையும் அவர் முரண்பாடாகக் குறிப்பிட்டார். எடப்பாடி பழனிசாமியின் முரண்பாடு திருப்பரங்குன்றம் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் நிலைப்பாடு முரண்பாடானது என்று பெ. சண்முகம் விமர்சித்தார். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது (2014) உயர் நீதிமன்ற அமர்வு வழக்கமாக ஏற்றப்படும் இடத்தில் தான் தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டதையும், 2017-18-இல் எடப்பாடி பழனிசாமி ஆட்சியின்போது தொடுக்கப்பட்ட ஒரு வழக்கு தள்ளு படி செய்யப்பட்டதையும் அவர் நினைவு படுத்தினார். “பாஜக எதைச் செய்தாலும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பது தான் எடப்பாடி பழனிசாமியின் நிலை. அதிமுகவும், எடப்பாடியும் பாஜகவின் கட்டுப்பாட்டில் உள்ளனர்” என்று அவர் கடுமையாகச் சாடினார். நீதி மன்ற உத்தரவுப்படி அங்கு தீபம் ஏற்ற அனுமதித்திருந்தால், தர்காவை இடிப்பதுதான் இந்துத்துவாவாதி களின் நோக்கமாக இருந்திருக்கும் என்றும், அந்தத் தீய நோக்கத்தைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு செயல்பட்டுள்ளதாகவும் அவர் பாராட்டி னார். மு.க. ஸ்டாலின் அரசு மக்களின் உரிமை மற்றும் வழிபாட்டு உரிமை யைப் பாதுகாப்பதில் சிறப்பாகச் செயல்படுகிறது என்றும் அவர் குறிப் பிட்டார். அமைதி காக்க அறைகூவல் “இந்துத்துவா பயங்கரவாதிகள் 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தைக் கைப்பற்ற, திருப்பரங்குன்றம் பிரச்சனையை எழுப்புகின்றனர். முருகக் கடவுள் மீது அவர்களுக்குக் கடுகளவும் பக்தி கிடை யாது,” என்று அவர் உறுதியாகத் தெரி வித்தார். இறுதியாக, “தமிழகத்தின் அமைதி யைப் பாதுகாக்க அனைவரும் ஒன்று சேர்ந்து நிற்போம். இந்துத்துவா பயங்க ரவாதிகளைப் புறக்கணிப்போம்” என்று பெ. சண்முகம் அறைகூவல் விடுத்துத் தனது உரையை நிறைவு செய்தார். இந்த ஆர்ப்பாட்டம், தமுமுக பொ துச் செயலாளர் பேரா. ஹாஜாகனி தலைமையில் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கட்சித் தலைவர் கு. செல்வப் பெருந்தகை, சிபிஐ மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஜி.ஆர். ரவீந்திரநாத், ஐ. பரந்தாமன் எம்எல்ஏ (திமுக), ரஜினி காந்த் (விசிக) உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர்.
