விலையில்லா மடிக்கணினி திட்டம்: முதல்வர் துவக்கி வைக்கிறார்!
சென்னை, டிச. 6 - தமிழக மாணவர்கள் 20 லட்சம் பேருக்கு விலையில்லா மடிக்கணினி கள் வழங்கப்படும் என்றும், முதற் கட்டமாக 2025-26ஆம் ஆண்டு 10 லட் சம் மாணவர்களுக்கு மடிக்கணினி கள் வழங்கப்படும் என்றும் அரசு அறி வித்துள்ளது. இதற்கான டெண்டர் கோரப்பட்டு, மடிக்கணினி கொள்முத லுக்கு பல்வேறு நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை நந்தம் பாக்கம் வர்த்தக மையத்தில் டிசம்பர் 19 அன்று நடைபெறும் நிகழ்வில், கல்லூரி மாணவர்களுக்கு விலை யில்லா மடிக்கணினி வழங்கும் திட் டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடக்கி வைக்கிறார்.