தொடர் கனமழை - புயல் பாதிப்பு முழு நிவாரணம் வழங்கிட விவசாயிகள் சங்கங்கள் கோரிக்கை
வடகிழக்கு பருவமழை மற்றும் ‘டிட்வா’ புயலின் தொடர் மழையால் வேளாண் பயிர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள நிலை யில், பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை உயர்த்தி, உடனடியாக வழங்கக் கோரி, தமிழ்நாடு விவசாயி கள் சங்கங்கள் சார்பில் தமிழக அர சுக்கு கோரிக்கை மனு அளிக்கப் பட்டுள்ளது. கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி தலைமையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலை வர் டி.ரவீந்திரன், மாநிலப் பொதுச் செயலாளர் சாமி.நடராஜன், மாநிலப் பொருளாளர் கே.பி.பெருமாள், மாநிலச் செயலாளர் பி.பெருமாள், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் பி.எஸ்.மாசிலா மணி, மாநிலத் துணைத்தலைவர் கே. உலகநாதன் உள்ளிட்டோர், வெள்ளி யன்று தலைமைச் செயலாளர் மற்றும் வேளாண்மைத் துறை செயலாளர் ஆகியோரை நேரில் சந்தித்து இம் மனுவை அளித்தனர். முக்கிய கோரிக்கைகள் சம்பா மற்றும் தாளடி நெல் பயிர்கள்: வடகிழக்கு பருவமழையாலும், டிட்வா புயலின் தொடர் மழையாலும் சம்பா மற்றும் தாளடி நெல் பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கி முற்றிலும் அழியும் நிலையில் உள்ளன. ஏற்கெனவே கடந்த செப்டம்பர் மாதத்திலும் குறுவை அறுவடைப் பயிர்கள் மற்றும் சம்பா இளம் பயிர்கள் பாதிக்கப்பட்டன. நிவாரணத் தொகை உயர்வு தேவை: நீரில் மூழ்கிய பயிர்களுக்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஏக்கருக்கு ரூ. 8,000/- என்ற நிவாரணம், விவசாயி களின் பாதிப்புக்கு ஏற்றதாக அமையாது. இது இடுபொருளுக்கான பேரிடர் வழிகாட்டுதல் தொகை மட்டுமே. ஒரு பருவத்தின் மகசூல் மற்றும் இதுவரை செய்த செலவு தொகையையும் இழந்த விவசாயி கள், காப்பீடு திட்டத்தின் மூலம் பேரிடர் பாதிப்பிற்கு கிடைக்க வேண்டிய தொகையையும் சேர்த்து, பாதிக்கப் பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 35,000/- வழங்க வேண்டும். கலைஞர் முதல்வராக இருந்தபோது, இதேபோல் முழு தொகையையும் அரசு வழங்கி, பின்னர் காப்பீட்டு இழப்பீட்டை அரசு எடுத்துக்கொண்டது நினைவூட்டப் பட்டுள்ளது. பிற பயிர்கள்: குலை விடும் நிலையில் உள்ள பல லட்சம் வாழை மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. நிலக்கடலை, வெற்றிலை, சோளம் உள்ளிட்ட சிறுதானியப் பயிர்களும் மழையால் பாதித்துள்ளன. இவற்றுக்கும் செலவை ஈடுசெய்து, வருமானம் ஈட்டிடும் வகையில் நிவாரணம் வழங்க வேண்டும். மனித உயிர் மற்றும் கால்நடை இழப்பு: மனித உயிரிழப்பிற்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். மேலும், கால்நடை இழப்பு மற்றும் குடியிருப்புகள் பாதிப்புக்கும் உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும். பாதிப்பு கணக்கீடு முறையில் மாற்றம் தேவை வரும் 8ஆம் தேதிக்குள் கணக்கெடுத்து நிவாரணம் வழங்கப் படும் என்ற வேளாண்மைத் துறை அமைச்சரின் அறிவிப்பு வரவேற்கத் தக்கது என்றபோதிலும், தற்போதைய கள நிலவரம் அதற்கு இசைவாக இல்லை. நீர் சூழ்ந்திருக் கும் நிலையில், பாதிப்பு கணக்கீடு செய்ய செயலி முறை சாத்திய மில்லை. ஏ.ஏ.ஓ-க்கள் மற்றும் வி.ஏ.ஓ-க் களின் களப்பணிக்கு ஒரு மாதத்திற்கு மேல் ஆகலாம். எனவே, உதவி என்பது துயர் அடைந்த நிலையில் உடனடியாகத் தேவைப்படுகிறது. எனவே, வழக்கமான முறையில் பாதிப்பை பார்வையிட்டு, கணக்கீடு செய்து, உயர்த்தப்பட்ட நிவாரணத் தொகையை உடன் வழங்க வேண்டு மென தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் தமிழக அரசை வலியுறுத்தி யுள்ளன.
