சிலி ஜனாதிபதி தேர்தல் : டிசம்பர் 14 இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு
சாண்டியாகோ,டிச.6- சிலி நாட்டின் ஜனாதிபதி தேர்தலுக் கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 14 அன்று நடைபெற உள்ளது. ‘யுனைடெட் ஃபார் சிலி’ என்ற மத்திய- இடதுசாரி கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக சிலி கம்யூனிஸ்ட் கட்சி யின் ஜீனட் ஜாரா போட்டியிடுகிறார். முதல் கட்ட தேர்தலில் 26.86 சதவீத வாக்கு களைப் பெற்று முதல் இடத்தை தக்க வைத்தார். தீவிர வலதுசாரியான ஹோசே அன்டோனியோ காஸ்ட் 23.93 சதவிகித வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பெற்றார். ஜீனட் ஜாரா தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை மாதம் 7,50,000 பெசோஸ் (சுமார் 71,957 ரூபாய்) என அதிகரிக்க உள்ளதாக அறி வித்துள்ளார். மேலும் மின்சாரக் கட்ட ணத்தைக் குறைக்கும் திட்டம். தொழிற் சங்கங்களின் கூட்டு பேரம் பேசும் உரிமையை வலுப்படுத்துவது உள்ளிட்ட மக்கள் நலன் அடிப்படையிலான திட்டங் களை அறிவித்துள்ளார். குறிப்பாக உள்நாட்டு பிரச்சனையாக உள்ள பணமோசடியைக் கட்டுப்படுத்த பல வங்கிக் கணக்குகளின் ரகசியத் தன்மையை நீக்குவது. போதைப்பொ ருள் கடத்தல் குழுக்களின் ஆதிக்கத்தை மட்டுப்படுத்தும் வகையில் துப்பாக்கி கட்டுப்பாடுகளைக் கடுமையாக்குவ தாகக் கூறியுள்ளார். தீவிர வலதுசாரிகள் சிலியில் குடியே றிய வெளிநாட்டு மக்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் நிலையில் மக்களை பாதுகாக்கும் விதமாக தற்காலிகமாகப் பதிவு திட்டம் கொண்டு வரப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இதே நேரத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ள காஸ்ட் வலதுசாரி தேசியவா தம், வெளிநாட்டினருக்கு எதிராக இன வெறியைத் தூண்டுவது, நலத்திட்ட உதவிக ளை குறைப்பது, கார்ப்பரேட் நிறுவனங்க ளுக்கான வரியை 27 சதவிகிதத்தில் இருந்து 23 சதவிகிதமாக குறைப்பது, தற்காலிக ஊழியர்களை நியமிக்கும் நிறுவனங்களுக்கான சலுகைகளை அதி கரிப்பது என வலதுசாரிக் கொள்கை களை முன் வைத்துள்ளார். குறிப்பாக சிலியின் முன்னாள் ஜனா திபதியாக இருந்த சோசலிஸ்ட் தலைவர் அலெண்டேவை அமெரிக்காவின் ஆதரவுடன் படுகொலை செய்து ஆட்சி அமைத்த பினோசெட் என்ற சர்வாதி காரியின் ஆதரவாளராகத் தன்னைக் காஸ்ட் அடையாளப்படுத்தி வருகிறார். முதல் கட்டத் தேர்தலை விட இரண்டாம் கட்டத் தேர்தலில் மிக கடுமையான போட்டி நிலவுகிறது. முதல் கட்டத் தேர்தலில் முதல் இரு இடங்களை பிடித்த இடது மற்றும் வலது சாரி வேட்பாளர்களை விட மூன்று, நான்கு, ஐந்தாவது இடத்தில் மையவாத மற்றும் வலதுசாரி வேட்பாளர்கள் உள்ள னர். அவர்கள் முறையே 19.71, 13.94, 12.47 சதவிகித வாக்குகளைப் பெற்றிருந்த னர். தற்போது இந்த வாக்குகள் தீவிர வலதுசாரியாக உள்ள காஸ்டுக்கு ஆதர வாக திரும்பலாம் என கூறப்படுகிறது. எனினும் மையவாத கட்சி ஆதர வாளர்கள் உள்ளிட்ட இதர பகுதியினரின் வாக்குகளை பெறுவதற்கான தீவிரமான பிரச்சாரத்தில் ஜீனட் ஜாராவின் சிலி கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி சோசலிஸ்ட் கட்சி கூட்டணி ஈடுபட்டுள்ளது வெற்றி வாய்ப்பை உருவாக்கித் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
