மதுரை, மே 9- அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைக ளுக்கான சங்கம் சார்பில் கொ ரோனா ஊரடங்கு கால நிவா ரணம் ரூ. 5 ஆயிரம் வழங்கிட வேண்டும் ,மாற்றுத்திறனாளி களுக்கு நிவாரண பொருட்கள் அரசு சார்பில் உடனடியாக வழங்கிட ஏற்பாடு செய்திட வேண்டும் என்ற கோரிக்கை களை முன்வைத்து அரசு அலு வலகங்களில் குடியேறும் போராட்டம் வியாழன் அன்று நடைபெற்றது. மதுரையில் மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அதிகாரி அலுவல கத்தில் மாநிலச் செயலாளர் பி. ஜீவா தலைமையிலும் மதுரை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மாவட்ட தலை வர் டி. நாகராஜன் தலைமையி லும் போராட்டம் நடை பெற்றது.இதில் மாவட்ட செயலாளர் பி.வீரமணி மா வட்ட துணைத் தலைவர் ஏ.பாண்டி துணைச் செயலா ளர்கள் டி. குமரவேல், எல். தங்கவேல், பொருளாளர் மாரியப்பன், மாவட்ட குழு உறுப்பினர் து. ஆனந்த குமார் உள்ளிட்ட நூற்றுக்க ணக்கானோர் கலந்து கொண்டனர்.