சிவகாசி, பிப்.21- 100 நாள் வேலை திட்டத்தில் அர சாணை எண் 52 ஐ அமல்படுத்த வலி யுறுத்தி தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் நலச் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அருப்புக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சுப்புராஜ் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் முத்து மாரி முன்னிலை வகித்தார். துவக்கி வைத்து மாவட்டத் தலைவர் நடராஜ் பேசினார். மாவட்ட பொருளாளர் அன்புச் செல்வன் கண்டன உரையாற்றினார். ஒன்றிய பொருளாளர் இளங்கோவன், ரேணுகாதேவி சமையன், சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர், சிவகாசியில் முத்துமாரியம்மள் தலைமையில் சிறிய புஷ்பம் முன்னி லையில் சிபிஎம் ஒன்றிய செயலாளர் பி.பாலசுப்ரமணியன் துவக்கி வைத்தார். மாவட்ட துணைத் தலைவர் ஸ்ரீதேவி, மாவட்ட செயலாளர் கே.நாகராஜ் கண்டன உரையாற்றினார். மேலும் இதில், நகர தலைவர் வதிஷ்ட்ட ராஜன் , வீரமுத்து, மாரிச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஒன்றியத் தலை வர் திருநாவுக்கரசு தலைமையில் செய்யதுஅலி,மனோகரன் ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாநில செயலாளர் ஜீவா, மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம் பூபதி,மாவட்டத் தலைவர் இன்னாசி ராஜா, மாவட்டத் துணைத் தலைவர்கள் மலர்விழி, சுப்பிரமணியன் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இராமநாதபுரம்
இராமநாதபுரம் மாவட்டம், மண்ட பம் ஒன்றியம் உச்சிப்புளியில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா தலை வர் நடராஜன் தலைமை வகித்தார் மாவட்ட பொருளாளர் அரிகரசுதன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.முருகேசன் கருப்பையா உள்ளிட்டோர் பங்கேற்றனர் கடலாடி யூனியன் அலுவலகம் முன்பு தாலுகா தலைவர் நூர்முகமது தலைமையில் தாலுகா செயலாளர் முகமது சுல்த்தான் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செய லாளர் வி மயில்வாகணன் ஆதரித்துப் பேசினார்.கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயலாளர் எம் இராஜ்குமார் பேசினார். போராட்டத்தின் நிறைவில் வட்டார வளர்ச்சி அலுவலர்(திட்டம்) நேரில் வந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். கமுதி யூனியன் ஆபீஸ் முன்பு மாவட்ட துணைத்தலைவர் முத்துராம லிங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாலுகா செயலாளர் ஸ்டா லின் ,பொருளாளர் முத்துமாணிக்கம். தலைவர் சந்திரன் உட்பட கலந்து கொண்டனர். முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக சங்கத்தின் மாவட்ட தலைவர் ராஜேஷ் தலைமை யில் நடைபெற்றது. தாலுகா நிர்வாகி முனியசாமி துணை நிர்வாகிகள் முத்து கண்ணன், வில்வத் துரை, ராமர் மற்றும் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி ஒன்றிய ஆணையர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் மனுக்களை பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.