“ உன் முகத்தைப்பார். பார்க்கவே ஒழுங்கில்லாமல், கருப்பாக உள்ளது.” என்று திவ்யாவின் பெரியப்பா கூறினார். அங்கு அமர்ந்திருந்த அனைவரும்திவ்யாவை பார்த்து சிரித்தனர்.
பள்ளியில் திவ்யா நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தாள், அப்போது அவள் சிரித்தாள். “சிரிக்காதே! நீ சிரிக்கும் போது உனது முகம் அசிங்கமாக உள்ளது.” என்றுஅவளுடையநண்பர்களில் ஒருத்தி கூறினாள்.
திவ்யாவின்சிரிப்பு உடைந்தது.
அவள் வீட்டிற்கு சென்று கண்ணாடியின் முன் நின்று தன் முகத்தை பார்த்து அழுதாள். அவள் கண்ணாடியுடன் பேச தொடங்கினாள். “என்னை யாருக்கும் பிடிக்கவில்லை” என்று கண்ணாடியிடம் கூறினாள். அதற்கு கண்ணாடி பதில் கூறியது.
“அவர்கள் அனைவரும் உன்னுடைய மாயக்கண்ணாடியே. அவர்கள் ஒவ்வொருக்கும் அவர் அவர்களைப் போலவே மாயக் கண்ணாடிகள் உள்ளன. ஆனால் நிலைகண்ணாடி நானே! அவர்களுடைய மாயக்கண்ணாடிகள் அவர்களின் குறைகளை, அவர்களுக்கு -உன்னை குறை சொல்லியது போலவே கூறும். அப்போது உனது வலியையும் வேதனையையும் அவர்கள் உணர்வார்கள். நீ எப்படி இருக்கிறாயோ அப்படியே இருந்தால் தான் அழகு” என்றது கண்ணாடி.
.”திவ்யாவுக்கு தன் மீது இருந்த நம்பிக்கை அதிகரித்தது. மற்றவர்கள் மீது இருந்த அவநம்பிக்கை உடைந்தது.
“நம் மனக்கண்ணாடியே நமது நிலையான நிலைகண்ணாடி. மற்றவர்கள் கருத்து வெறும் மாயக்கண்ணாடியே- நமக்கு”.
“என்னை முழு அன்புடன் விரும்புபவர்கள் என்னைத்தவிர வேறு யாராக இவ்வுலகத்தில் இருக்க முடியும்-நமக்கு நாமே துணை”.
“என் இதயமே கோவில். இயற்கையே அதன்பக்தர்கள்.” என்று உணர்ந்தாள். சுயமரியாதை வழியில் வீரநடை நடந்தாள் “திவ்யா” இந்த ‘மாயக்கண்ணாடி’ சமுதாயத்தில்.....
- ச.எழில் பிருந்தா,
12 ஆம் வகுப்பு, அரசு மகளிர் மேனிலைப் பள்ளி