மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள், வேட்பாளர் அறிமுக கூட்டம்
மயிலாடுதுறை, ஏப். 4- மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகேயுள்ள ஆறுபாதி மைதானத்தில் பூம்புகார் சட்டமன்றத் தொகுதியில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில், செயல்வீரர்கள் மற்றும் பூம்புகார் தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பூம்புகார் தொகுதியின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் நிவேதா எம். முருகன் அறிமுகப்படுத்தப்பட்டார். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும் என கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் உரையாற்றினர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், சிபிஐ மாவட்டச் செயலாளர் ஏ. சீனிவாசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் குத்தாலம் கல்யாணம், அருட்செல்வன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உரையாற்றினர். தோழமை கட்சிகளின் மாவட்ட, ஒன்றிய மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
