மதுரை
மதுரை மாவட்டம் மேலூர் அருகே தனியார் பள்ளி பேருந்து காலை மாணவர்களை ஏற்றிக் கொண்டு பள்ளிக்குச் சென்ற போது விபத்துக்குள்ளாகிக் கவிழ்ந்தது. விபத்தைக் கண்ட அப்பகுதி மக்கள் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். பேருந்தில் பயணித்த மாணவர்கள் 20 பேர் இந்த விபத்தில் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மதுரை ராஜாஜி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிலருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. திருப்புவனம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.