ஸ்கேன் இந்தியா
கோர்ட்டாவது..! நீதிமன்றத் தீர்ப்புகள் முழுமையாக வருவதற்கு முன்பே கலவரத்திற்கு ஏற்பாடு செய்யும் பாஜக, தனது ஆட்சியுள்ள உத்தரப்பிரதேசத்தில் நீதிமன்ற ஆணைகளை மதிப்பதேயில்லை. பல்வேறு சட்ட ஒழுங்குப் பிரச்சனைகளில், காவல் நிலையங்களில் உள்ள சிசிடிவி காட்சிகள் சேமிக்கப்படவில்லை என்ற பிரச்சனை இருந்தது. பல குற்றவாளிகளைத் தப்பிக்க விட்டார்கள். அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ அமர்வு ஒரு உத்தரவை 2020இல் போட்டது. காட்சி களை 18 மாதங்களுக்கு சேமிக்க வேண்டும் என்பதுதான் அந்த ஆணை. அண்மையில் மாநிலக் காவல்துறைத் தலைவர் (டிஜிபி) வெளியிட்ட சுற்றறிக்கையில், இரண் டரை மாத காலத்திற்கு சேமித்தால் போதும் என்றி ருந்தது. “என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்” என்று நீதிபதி சீறியிருக்கிறார். வழக்கம்போல, “கோர்ட்டா வது.. ஒண்ணாவது” என்றிருக்கிறார்கள் பாஜகவினர். வாழ்க.. வாழ்க..! திரைப்படத்தில் “வருங்கால ஜனாதிபதி வாழ்க” என்று காசு கொடுத்து முழக்கமிட வைக்கும் காட்சி உண்மையில் அரங்கேறியதாகத் தெரி கிறது. அண்மைக்காலமாக ஐக்கிய ஜனதா தளம் கட்சி யில் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள முன்னாள் எம்.பி., கே.சி.தியாகிதான் அப்படியொரு முழக்கத்தை வைத் துள்ளார். ஜனாதிபதி என்று சொன்னால் கூடத் தனது தலைவர் நிதிஷ் குமார் திருப்தியடைவாரா என்று சந்தே கத்தில், பாரத் ரத்னா கொடுங்கள் என்று கேட்டுள்ளார். கட்சியின் இரண்டாம் மட்டத் தலைவர்கள் அதிர்ந்து போயினர். நம்மையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விடு வாரோ? என்ற அச்சத்தில் “இப்படித் தொடர்ந்து இவர் தன்னிஷ்டப்படி பேசிக் கொண்டிருக்கிறார்” என்று கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜீவ் ரஞ்சன் கூறி யுள்ளார். நான் சொல்வது மறுக்கிறீர்களா என்று மறுபடி யும் கே.சி.தியாகி கிடுக்கிப்புடி போடுகிறார். உட்கட்சி மோதல் களைகட்டியுள்ளது. பூ பாரதி தெலுங்கானாவில் நில உரிமை, பதிவு, வாங் கல், விற்றல் உள்ளிட்டவற்றிற்கு உதவும் வகையில் “பூ பாரதி (Bhu Bharati)” என்ற திட்டத்தை அந்த மாநில அரசு அறிமுகப்படுத்தியது. இந்த வசதியை சேவை மையங்கள் வாயிலாகப் பயன் படுத்திக் கொள்ள முடியும். ஆனால், சேவை மையங் கள், தனியார் இணையதள மையங்கள் மற்றும் சைபர் குற்றவாளிகளின் கள்ளக் கூட்டணி, நிலப் பத்திரங் களையே மாற்றியுள்ளன. இதனால் அரசுக்கு கோடிக் கணக்கான ரூபாய் இழப்பும் ஏற்பட்டுவிட்டது. ஒட்டு மொத்த பூ பாரதி திட்டத்தின் தகவல்கள் அனைத்தை யும் இவர்கள் திருடியுள்ளார்கள். ஜல்காவ்ன் என்ற ஒரேயொரு ஒன்றியத்தில் மட்டும் நான்கு நாட்களில் 78 லட்சம் ரூபாய்க்கு அரசை ஏமாற்றியுள்ளனர். இங் குள்ள அரசு அதிகாரிகள் விழித்துக் கொண்டதால்தான் மாநிலம் முழுவதும் நடந்துள்ள மோசடியைக் கண்டு பிடிக்க முடிந்திருக்கிறது. கலகலத்த கூட்டணிகள் நாடு முழுவதும் உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணியில் வலுவாக இருந்த மாநிலங்க ளில் மகாராஷ்டிராவும் ஒன்றாகும். சட்டமன்றத் தேர்தலில் தோல்வி என்றாலும், மக்களவைத் தேர்த லில் 48 தொகுதிகளில் 30 தொகுதிகளை இந்தியா கூட் டணி கைப்பற்றியிருந்தது. தற்போது நடைபெற்று வரும் உள்ளாட்சித் தேர்தல்களில் கூட்டணி கலகலத்துப் போயிருக்கிறது. சிவசேனாவும்(உத்தவ்), தேசியவாத காங்கிரஸ் (சரத்) கட்சியும் காங்கிரசைக் கழற்றி விட்டு விட்டன. மும்பையில் ராஜ் தாக்கரேயுடன் உத்தவ் கைகோர்த்துக் கொண்டார். புனே உள்ளிட்ட இரண்டு மாநகராட்சியில் “குடும்பம்” இணைகிறது என்று சொல்லி தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் சேர்ந்து கொண்டன. ஆளும் கூட்டணியும் ஒற்றுமையாக இல்லை. ஒருவரை யொருவர் எதிர்த்துப் போட்டியிட்டு வருகிறார்கள். -கணேஷ்
