tamilnadu

சாத்தான்குளம் படுகொலை வழக்கு... ஜாமீன் மனு விசாரணையை ஒத்திவைத்தது நீதிமன்றம்

மதுரை:
சாத்தான்குளம் தந்தை மகன்கொல்லப்பட்ட சம்பவத்தில் காவலர்கள் முருகன் , தாமஸ் பிரான்சிஸ், முத்துராஜ்  முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இது குறித்து சிபிஐ விரிவான பதில் அறிக்கைதாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.சாத்தான்குளம் செல்போன்வியாபாரிகள் ஜெயராஜ்-பென்னிக்ஸ் காவல்துறையினரால் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள காவலர்கள் முருகன், தாமஸ் பிரான்சிஸ், முத்து ராஜா ஆகியோர் ஜாமீன் வழங்கக் கோரி இரண்டாவது முறையாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தனர்.

சாத்தான்குளத்தில் தந்தைஜெயராஜ், மகன் பெனிக்ஸ் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக  கைது செய்யப்பட்டு தற்போதுவரை சிறையில் இருக்கிறோம் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை  உத்தரவின்படி சிபிசிஐடி காவல்துறையினர் வழக்கை விசாரித்த நிலையில் தற்போது சிபிஐ காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.வழக்கு தொடர்பான ஆவணங்களை ஏற்கனவே தடயஅறிவியல் துறை அதிகாரிகள்சேகரித்து விட்ட நிலையில்விசாரணையும் முடிவடைந்துள்ளது.ஜாமீன் வழங்கும் பட்சத்தில் தலைமறைவாக மாட்டேன் என்றும், நீதிமன்றம் வகுக்கும் கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்படுவேன் என்றும் உறுதி கூறுகிறோம். இந்த வழக்கில் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தனர்.இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன்பாக வெள்ளியன்று விசாரணைக்கு வந்தது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கைது செய்யப்பட்டு 80நாட்களை கடந்து விட்டது. எனவேஜாமீன் வழங்கக் கோரினர்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி சிபிஐ தரப்பில்விரிவான பதில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.