23 சாம்சங் தொழிலாளர்களின் பணி நீக்க உத்தரவை ரத்து செய்து மீண்டும் பணி வழங்க வேண்டும், பதிவு செய்ய ப்பட்ட சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்களுககு தீர்வு வேண்டும், தொழிலாளர்கள் மீது மனித உரிமை மீறல்கள் திருத்தப்பட வேண்டும் என்றும் வாக்கு எடுப்பு நடத்தி பெரும்பான்மை சங்கம் தீர்மானிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் திங்களன்று (ஏப்.21) அன்று சிஐடியு சார்பில் ஊர்வலம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்கத் தலைவர் இ. முத்துக்குமார் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் கே. நேரு மற்றும் சங்க தலைவர் எல்லன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.