tamilnadu

img

என்எல்சியை பாதுகாக்க சிஐடியுவிற்கு வாக்களிக்க வேண்டும்

என்எல்சியை பாதுகாக்க சிஐடியுவிற்கு வாக்களிக்க வேண்டும்

நெய்வேலி பொதுக்கூட்டத்தில்  சு. வெங்கடேசன் எம்.பி., உரை

கடலூர், ஏப்., 21- என்எல்சி நிறுவனத்தை பாதுகாக்க ரகசிய வாக்கெடுப்பில் சிஐடியு தொழிற்சங்கத்திற்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடே சன் பேசினார். கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மத்திய பொ துத்துறை நிறுவனமான என்எல்சி (நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட்) செயல்பட்டு வருகிறது. இந்த என்எல்சி நிறுவ னத்தில் தொழிற்சங்கங்களுக்கான ரகசிய வாக்கெடுப்பிற்கான தேர்தல் ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் சிஐடியு தொழிற் சங்கம் வரிசை எண் 1இல் போட்டியிடுகிறது. இந்நிலையில், சிஐடியு சங்கத்தை முதன்மை சங்கமாக வெற்றி பெற செய்ய வேண்டும் என வலியுறுத்தி நெய்வேலி எட்டு ரோட்டில் பொது கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் சு.வெங்கடேசன் எம்.பி., பேசியதாவது:  

நாடாளுமன்ற  நிலைக்குழுக்களின் முக்கியத்துவம்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏதாவது ஒரு நிலைக் குழுவில் உறுப்பினராக இருக்க வேண்டும். அது நாடாளுமன்ற விதி. நாடாளு மன்றத்தில் எல்லாவற்றையும் விவாதிக்க முடியாது. எல்லா கட்சி உறுப்பினர்களை கொண்ட நிலை குழுக்களை அமைத்து விவாதித்து அதன் முடிவு நாடாளுமன்றத்திற்கு வரும். கடந்த ஐந்து ஆண்டுகளாக கல்வி நிலைக் குழுவில் உறுப்பி னராக இருந்தேன். பெரும் பேசுப் பொருளாக உள்ள புதிய கல்வி கொள்கை அந்த நிலை குழுவில் தான் விவாதிக்கப்பட்டது. கல்விக் கொள்கை குறித்த போராட்டம் தமிழ்நாட்டின் பிள்ளைகளுக்கு பள்ளி கல்வி க்கு கொடுக்க வேண்டிய ரூ.2,500 கோடியை மோடி அரசு நிறுத்தி வைத்துள்ளது. மும்மொழி கொள்கையை அமுல்படுத்தினால் தான் கொடுப் பேன் என்று நிறுத்தி வைத்துள்ளார்கள். அப்படி நிறுத்தி வைப்பதற்கு ஒன்றிய அரசுக்கு அதிகாரம் இல்லை. தனக்கு அதிகாரம் இல்லாததை ஒன்றிய அரசு செய்கிறது. அதைத்தான் நாங்கள் கேட்கின் றோம். மூன்று மொழி கொள்கையை கடைபிடித்தே ஆக வேண்டும் என்று ஒன்றிய அரசு விடாமல் குரல் கொடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கை 1967ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை பின்பற்றி வருகின்றோம். தமிழ்நாடு பின்னுக்குப் போய்விடவில்லை. கடந்த நான்கு ஆண்டுகளாக கல்வி நிலை குழுவில் விடாமல் சண்டை போட்டு போராடி வந்துள்ளேன். அந்தக் குழுவில் மூத்த செயலாளர் ஒருவர் என்னிடம் ஒரு கேள்வியை கேட்டார். ‘எல்லா அஜண்டாவிலும் நீங்கள் மட்டுமே சண்டை போட்டுக் கொண்டு உள்ளீர்களே ஏன் தெரியுமா?’ என்று கேட்கும் போது எனக்கு தெரியாது என்று தெரிவித்துவிட்டேன். ‘29 உறுப்பினர்களில் சொந்தமாக பல்கலைக்கழகம் இல்லாத ஒரு எம்.பி., நீங்கள் மட்டும் தான்’ என்று தெரிவித்தார். சொந்தமாக பல்கலைக்கழகம் வைத்துள்ள 28 எம்.பிக்கள் ஒன்றாகக்கூடி கல்வி கொள்கையை தீர்மானித்தால் அந்த கல்விக் கொள்கை எப்படி இருக்கும் என்று கேள்வி எழுப்பினார். கனிம சுரங்கத்துறை குறித்த போராட்டம் 18ஆவது நாடாளுமன்றத்தில் தற்போது கனிமம் சுரங்கத் துறை நிலை குழு உறுப்பின ராக செயல்பட்டு வருகிறேன். இந்த முதல் கூட்டத்தி லேயே டங்ஸ்டன் சுரங்கத்தை தனியாருக்கு ஏலம் விடும் பிரச்சனையை விவாதித்து நல்ல தீர்வுக்கு கொண்டுவந்தோம். கனிம துறையும், எஃகு துறையும், நிலக்கரி துறையும், இந்திய பொருளாதாரத்தில் அடுத்த கட்டத்தை நோக்கி நின்று கொண்டிருக்கிறது. பொதுத்துறை விற்பனைக்கு எதிராக என்எல்சி நிறுவனம் அதானி கையிலும், அம்பானி கையிலும் போகாது என்று சொல்ல முடியுமா? பொது துறையை வைத்துக் கொண்டி ருப்பது அவர்களுக்கு கொடுப்பதற்காக தான் என்ற முடிவோடு இருக்கிறது ஒன்றிய அரசு. கொடுப்பது மட்டும்தான் ஒன்றிய அரசின் ஒரே அஜண்டா. திருச்சி விமான நிலைய விழாவில் சமீபத்தில் மோடி பங்கேற்றதற்கு காரணம், இந்தி யாவில் அடுத்து விற்க உள்ள 5 விமான நிலை யங்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது திருச்சி விமான நிலையம். கனிமத்துறையை ஒட்டு மொத்தமாக இந்த நாட்டில் பெரு முதலாளிகளுக்கு அள்ளிக் கொடுக்கின்ற மிக, மிக மோசமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. என்எல்சி லாபம் மற்றும் தொழிலாளர் நலன் கடந்த காலண்டில் என்எல்சியில் எதிர்பார்க்கப் பட்ட லாபம் ரூ.250 கோடி. ஆனால் வந்த லாபம் ரூ.668 கோடி. இவ்வளவையும் உருவாக்கிய தொழிலாளி ஆயிரம் ரூபாய்க்கும், 500 ரூபாய்க்கும் போராடிக் கொண்டிருக்கின்றான். அர சியல் உரிமை இருந்தால் மட்டும்தான் தொழிலா ளியாய் வெற்றி பெற முடியும். நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் செல்வ வளம் கொழிக்கும் நிறுவனமாகவும், லாபத்தை கொட்டும் நிறுவனமாகவும் என்எல்சி உள்ளது. இங்கு பார்க்கும்போது, லாபத்தை உருவாக்கி இருக்கின்ற தொழிலாளர்களுக்கு ஒன்றுமே கிடைக்கவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் அனல் மின் நிலை யத்தில் மட்டும் 29 தொழிலாளர்கள் விபத்தில் உயிரிழந்து உள்ளனர். நிலத்தை கொடுத்தவர்க ளுக்கு, வாரிசுகளுக்கான வேலை, ஒப்பந்த தொழி லாளிகளுக்கான வேலையை கொடுக்கவில்லை. சுற்றுச்சூழல் பாதிப்பு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு பசுமை தீர்ப்பாயத்தில் குடிநீர் 112 சதவீதம் நஞ்சு கலந்த பாதரசமாக உள்ளது. நிலத்தடி நீர் 68 சதவீதம் நஞ்சு கலந்த பாதரசமாக உள்ளது என அறிக்கை வந்துள்ளது. இதனை நிறுவனம் சரி செய்ய வேண்டும். தொழிலாளர் உரிமைகளை காத்தல் சம்பள உயர்வு என்பது வாழ்க்கையை மேலும் சிறப்பாக்குவதற்கான போராட்டம். நல்ல வாழ்க்கையை எல்லாருக்குக்கும் அமைவ தற்கான போராட்டம் தான். உரிமை என்பது தனி நபரின் ஆசை சார்ந்ததோ, சங்கத்தின் தேவை சார்ந்ததோ அல்ல, மனிதனின் பகுத்தறி விற்கானது. பகுத்தறிவு கொண்ட மனிதன் இருக்கும் வரை உரிமைக்கான போராட்டம் இருந்து கொண்டே இருக்கும். நெய்வேலியின் வரலாறு இவ்வளவு வளங்கள் உள்ள நெய்வேலியில் நிலத்தில் இப்படி ஒரு தொழிற்சாலையை உரு வாக்க முடியும் என்று கனவு கண்டதுதான் பி. ராமமூர்த்தியின் தீர்க்க தரிசனம். இது சோவியத் யூனியன் என்ற சோஷலிச நாட்டின் சர்வதேச அரசியல் பார்வையில் இருந்து உருவானது. சுதந்திர இந்தியா தொழில்நுட்பங்களை உரு வாக்க முடியாமலும், மூலதனம் இல்லாமலும் திணறியது. அன்று முதலாளிகளிடம் பெரும் நிதி  இல்லை. எனவே அரசே மக்களிடமிருந்து பல வகைகளிலும் செல்வத்தை திரட்டி பெரும் தொழில் களை உருவாக்கியது. நாட்டின் மகத்தான செல் வங்களாக நவரத்தின பொது துறைகளை உரு வாக்கியது. அப்படி உருவாக்கப்பட்ட செல்வங் களை இன்று நான்கு பேருக்கு வெட்டி விற்கிற வேலை இரவு பகலாக நடக்கிறது. மக்களின் சொத்துகள் கார்ப்பரேட்டுகளின் சொத்தாக மாற்று கின்ற யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. வளங்களின் பகிர்வு இந்திய பெரு முதலாளிகளின் கையில் 56 சதவீத நாட்டின் வளங்கள் சென்று சேர்ந்துள்ளன. இந்திய வளங்களை சூறையாட எல்லா விதமான நடவடிக்கையும் எடுக்கிறார்கள். அவர்களுக்கு எதிராக சமரசம் இல்லாமல் போராடும் இயக்கமாக செங்கொடி இயக்கம் மட்டுமே உள்ளது.  அதானிக்கு, அம்பானிக்கு வளங்களை பங்கிட்டு கொடுக்கும் போதும், கார்ப்பரேட்களுக்கு பொது துறையை பங்கிட்டு கொடுக்கும் போது, நாடாளுமன்ற உறுப்பினர்களின் சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து மவுனமாகி விடுகிறது. ஆனால், எந்த சமரசமும் இல்லாமல் நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் போராடும் குரலாக கம்யூனிஸ்டுகளுடைய குரல் மட்டும்தான் இருக்கிறது. வேலை வாய்ப்புகளில் பாகுபாடு என்எல்சியில் 299 பொறியாளர்கள் தேர்வு செய்ததில் ஒருவர் கூட தமிழர் கிடையாது. தேர்வு நடத்திய முறையை உடனடியாக வெளியிட வேண்டும் என்று கடிதம் கொடுத்தவுடன் தேர்வு ரத்து செய்யப்படுகிறது என்று அறிவித்து விட்ட னர். அதேபோல் ரயில்வே தேர்வில் தமிழக மாண வர்களுக்கு ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா வில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. உரிய விளக்கம் வேண்டும் என்று கேட்கும் போது தொழில்நுட்ப காரணங்களால் தேர்வு ரத்து செய் யப்படுகிறது என்று அறிவித்துவிட்டனர். மக்களின் குரலாக நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினரின் குரல் என்பது பாதிக்கப்பட்ட மக்களின் குரலை தேசத்தின் குர லாக மாற்றுகின்ற வாய்ப்பு. இந்தியாவின் பொது துறையை அழிப்பது, மாநில உரிமைகளை பறிப்பது, தமிழ்நாட்டை வஞ்சிப்பது, மொழியாக தமிழ் மொழியை முற்றிலும் நசுக்குவது என்ற கொள்கையோடு செயல்படுகின்றனர். சிஐடியுவிற்கு வாக்களியுங்கள் என்எல்சி நிறுவனத்தில் வருகின்ற ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில், என்எல்சி இந்திய பொது துறையாக காப்பாற்றப்பட வேண்டும். இதில் தொழிலாளர்களின் உரிமை நிலை நிறுத் தப்பட வேண்டும் என்ற அரசியல் காரணங்க ளுக்காக சிஐடியு சங்கத்திற்கு வாக்களியுங்கள். 18,000 பேர் வேலை செய்த இடத்தில் இன்று வெறும் 6,000 பேர் உள்ளனர். ஏன் வேலைக்கு ஆள் எடுக்கவில்லை? எல்லாம் அவுட்சோர்சிங், ஒப்பந்த பணியாக உள்ளது. மனித உழைப்பை எவ்வித வெகுமதியுமற்ற ஒன்றாக பார்க்கிற கொடூர முதலாளித்துவ விதிகளை தகர்கிற அரசியல் பார்வையை வளர்த்தெடுக்க வேண்டும். என்எல்சி நிறுவனத்தில் சட்டத்தின் உரிமைகளை பெற்று நிற்கும் தொழிலாளர்கள் என்ற இந்த இடத்தை தக்க வைப்பது முக்கியமானது. செங்கொடி இயக்கத்தின் அரசியல் பார்வை நெய்வேலி அதானிகளின் கைகளுக்கு போ காமல் தடுப்பது, தொழிலாளர்களின் உரிமை களை வலிமை படுத்துவது, பொதுத்துறையை அனைத்து வகையிலும் காப்பாற்றுவது - இந்த நடவடிக்கைகளில் சமரசம் இல்லாமல் இதனை செங்கொடி இயக்கத்தால் மட்டுமே முடியும். எனவே சிஐடியு சங்கத்திற்கு வரிசை 1இல் வாக்க ளியுங்கள்” இவ்வாறு பேசினார்.  பொது கூட்டத்திற்கு என்எல்சி தொழிலாளர் ஊழியர் சங்கத்தின் தலைவர் டி.ஜெயராமன் தலைமை தாங்கினார்.பொதுச் செயலாளர் எஸ். திரு அரசு, சிஐடியூ மாவட்டச் செயலாளர் பி. கருப்பையன், சிபிஎம் மாவட்ட செயலாளர் கோ.மாதவன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.