எல்ப்ரஸ் மலை சிகரத்தை அடைந்த தமிழகத்தின் முதல் இளம் பெண் நிஷா
சென்னை,பிப்.21 ஐரோப்பாவில் மிகவும் உயரமான எல்ப்ரஸ் மலை சிகரத்தை தமிழகத்தை சேர்ந்த சிறுமி நிஷா (வயது 15) தனது தந்தையுடன் ஏறி சாதனை படைத்துள்ளார். நிஷாவின் தந்தை சசிகுமார் கெந்தம் இந்திய மின்னணு தொழில்கள் சங்கத் தின் தலைவராக இருந்து வருகிறார். தந்தை, மகள் இருவரும் மலையேற்றத்தில் ஆர்வம் கொண்டவர்கள் இந்நிலையில் திங்கட்கிழமையன்று சசிகுமார் கெந்தம் மற்றும் அவரது 15 வயது மகள் நிஷா ஆகிய இருவரும் 12 மணி நேர கடினமான மலையேற்றத்திற்கு பின்னர் 5642 மீட்டர் உயரம் கொண்ட ஐரோப்பாவின் மிக உயர மான சிகரமான எல்ப்ரஸ் மலை மீது ஏறி சாதனை படைத்துள்ளனர். இந்த சாதனைக்கு தமிழ்நாடு தொழில் மற்றும் வர்த்தகத் துறையின் அமைச்சர் டிஆர்பி ராஜா தனது வாழ்த்துகளை தெரி வித்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் டிஆர்பி ராஜா தனது எக்ஸ் தளப் பக்கத்தில், ‘’எங்களுடைய டாக்டர் சசிகுமார் கெந்தம் மின்னணுவியல் உற்பத்தித் துறையில் பல பத்தாண்டுகள் கால கடின உழைப்பின் மூலம் தமிழ்நாடு புதிய உயரங்களை அடைய உதவி னார். இப்போது சசிகுமார் தனது மகளுடன் பிரமிக்கதக்க உயரங் களை எட்டியுள்ளார். சசிகுமார் கெந்தம் மற்றும் அவரது 15 வயது மகள் நிஷா ஐரோப்பாவின் மிக உயரமான சிகரமான எல்ப்ரஸ் மலையை அடைந்ததை பகிர்ந்து கொள்வதில் பெருமை ப்படுகிறேன். 12 மணி நேர கடினமான மலையேற்றத்திற்கு பிறகு 5642 மீட்டர் உயரமுள்ள சிகரத்தை அடைந்ததற்கு வாழ்த்துகள். எல்ப்ரஸ் மலை சிகரத்தை அடைந்த தமிழ்நாட்டின் முதல் இளம்வயது பெண் நிஷா இருக்கலாம் என்பது சாதனையை இன்னும் ஊக்கப்படுத்துகிறது. இதை உண்மையிலேயே சிறப்பான தாக்குவது என்னவென்றால் அவர்கள் சிகரத்தை அடைந்த பிறகு நமது தமிழ் தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் இரண்டையும் பாடினர். அதுதான் தமிழ் நாட்டின் உற்சாகம். இது, எப்போதும் நிலைத்திருக்கும். அவர்கள் இன்னும் பல சிகரம் அடைய வாழ்த்துகிறேன்.” என்று அமைச்சர் டிஆர்பி ராஜா தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கூறியுள்ளார். எல்ப்ரஸ் மலை ஐரோப்பாவின் மிக உயரமான சிகரம் ஆகும். இது காகசஸ் மலைத்தொடரில் தென்மேற்கு ரஷ்யாவில் அமைந்துள்ளது. இது 5642 மீட்டர் (18510 அடி) உயரம் கொண்டது. இது, இரண்டு கூம்புகளுடன் கூடிய அழிந்துபோன எரிமலை என்பது குறிப்பிடத்தக்கது.