பாட்டாளி வர்க்கத்தின் மகத்தான தியாகிகளாம் திருமெய்ஞானம் அஞ்சான் - நாகூரான் 43ஆம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி ஜனவரி 19 ஞாயிறன்று மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகே உள்ள திருமெய்ஞானம் தியாகிகள் ஸ்தூபிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் நாகைமாலி மற்றும் மாவட்டச் செயலாளர்கள் வி.மாரிமுத்து(நாகை), பி.சீனிவாசன்(மயிலாடுதுறை), சின்னை.பாண்டியன்(தஞ்சாவூர்), விவசாயத் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம், வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன் உள்ளிட்டோர் செவ்வணக்கம் செலுத்தினர்.