பெரம்பலூர், ஜன.19 - கை.களத்தூரில் தலித் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 4 காவல் உதவி ஆய்வாளர்கள், தலைமைக் காவலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டம், வேப்பந் தட்டை தாலுகா, கை.களத்தூரில் தலித் இளைஞர் மணிகண்டன், சாதி ஆதிக்க நபர் ஒருவரால் காவல்துறையினர் கண் முன்னே கழுத்தறுத்துப் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் குற்றவாளியான தேவேந்திரனை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து மணிகண்டன் மனைவி மீனா (25) கொடுத்த புகாரின் பேரில் கை.களத்தூர் காவல்துறை யினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற் கொண்டுள்ளனர். சிபிஎம் வலியுறுத்தல் தலித் இளைஞர் மணிகண்டன் படு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, குற்றவாளிகள் அனை வரையும் கைது செய்வதோடு, இந்தக் குற்றத்திற்கு உடந்தையாக இருந்த காவல்துறையினர் மீதும் வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தினார். வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மணிகண்டனின் மனைவி மீனாவிடம், அரசு சார்பில் முதற்கட்ட நிதி உதவி யாக தொகை ரூ.6 லட்சம் சனிக் கிழமை வழங்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினரின் அலட்சியப் போக்கை திருச்சி சரக டிஐஜி வருண்குமார் கண்டித்துள் ளார். கை.களத்தூர் காவல் உதவி ஆய்வாளர்கள் கொளஞ்சியப்பன், மணிவேல், குமார் ஆகியோரை ஆயு தப்படைக்கு பணியிட மாற்றம் செய்தும், உதவி ஆய்வாளர் சண்முகத்தை காத் திருப்போர் பட்டியலில்வைத்தும் உத்தரவிட்டுள்ளார். தலைமைக் காவலர் ஸ்ரீதரை சஸ்பெண்ட் செய்து பெரம்பலூர் எஸ்.பி. ஆதர்ஷ்பசேரா உத்தரவிட்டுள்ளார். சிபிஎம்-தீ.ஒ.முன்னணி தலைவர்கள் சந்திப்பு ஜனவரி17 அன்று மணிகண்டன் படு கொலை செய்யப்பட்டதால், அவரது உறவினர்கள் மற்றும் பட்டியலினத்தை சேர்ந்த மக்கள் மணிகண்டனின் கொலைக்கு காரணமான குற்றவாளி கள் மற்றும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை கை.களத்தூர் காவல்துறையினர், கல்வீச்சில் ஈடுபட்டதாக பட்டியல் வகுப்பு இளைஞர்கள் இரண்டு பேரை விசாரணைக்கு அழைத்துச்சென்றுள்ள னர். மேலும் வீடு வீடாகச் சென்று பட்டி யலின இளைஞர்கள் மற்றும் ஆண் களை தேடியதோடு பெண்களையும் மிரட்டியுள்ளனர். இதனால் அந்த மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இதையறிந்த தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்க மூத்த தலை வர் என்.செல்லத்துரை, மாவட்டச் செய லாளர் கோகுலகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் கருணாநிதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் பி.ரமேஷ், மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் கலையரசி, ரெங்க நாதன், ஏ.கே.ராஜேந்திரன், வேப்பந்தட் டை ஒன்றியச் செயலாளர் சக்திவேல், கிளைச் செயலாளர் முருகேசன், செல்வராஜ், கை.களத்தூர் விடுதலை நகருக்கு சென்று அப்பகுதி மக்களை சந்தித்து, யாரும் பயப்பட வேண்டாம் என ஆறுதல் கூறினர்.