tamilnadu

img

“தமிழ்நாட்டுக்கான நிதிப் பகிர்வை ஒன்றிய அரசு தருவதே கிடையாது”

விருதுநகர், ஜன.19-  தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிதிப்பகிர்வை தருவதே கிடையாது என்று தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம் சாட்டினார்.  அமைச்சர் தங்கம் தென்னரசு விருதுநகரில் ஜனவரி 19 அன்று நடை பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:  கடன் நிலை கட்டுக்குள்ளே தமிழ்நாடு அரசின் கடன் விவ காரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு புரிதல் இல்லை. எதிர்க்கட்சித் தலை வராக இருந்து கொண்டு மக்களி டையே தவறான தகவலை பழனிசாமி பரப்புகிறார். தமிழ்நாடு அரசு திவாலா கிறது என எடப்பாடி பழனிசாமி கூறி யது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு. உள்நாட்டு உற்பத்தியை பொறுத்தே கடன் வாங்கும் அளவு,  திருப்பிச் செலுத்தும் திறன் முடிவு செய்யப்படுகிறது. நிதிக்குழு பரிந்து ரைத்த அளவைவிட குறைவாகவே தமிழ்நாடு அரசு கடன் வாங்கியுள்ளது.  மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒன்றிய  அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை. மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.26 ஆயிரம் கோடி நிதியை தமிழக அரசே  ஒதுக்கியது. பிரதமர் வீடு வழங்கும் திட்டத்துக்கு தமிழக அரசே கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது.  தமிழ்நாட்டின் நிதி நிலை என்பது  கட்டுக்குள்தான் உள்ளது. நிதி  நிலைமையை கட்டுக்குள் வைக்க  தேவையான பல்வேறு நடவடிக்கை களையும் எடுத்து வருகிறோம். நிதி  மேலாண்மையிலும் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 2021-22 நிதி யாண்டில் தமிழ்நாடு அரசு 28.7  சதவீதம் அளவுக்கு கடன் வாங்க லாம் என்று நிதிக்குழு பரிந்துரைத்தி ருந்தது. 2021-22-இல் தமிழ்நாடு அரசு 2.71 சதவீதம் அளவுக்கே கடன் வாங்கி யது. 2022-23-இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 29.3 சதவீதம் கடன் வாங்க பரிந்துரைத்த நிலையில் 26.87  சதவீதம் கடன் மட்டுமே வாங்கப் பட்டது. பல திட்டங்களை மாநில அரசு  தனது சொந்த நிதியில் இருந்தே செயல்படுத்தி வருகிறது.  தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிதிப்பகிர்வை தரு வதே கிடையாது. பாஜக ஆளும் மாநி லங்களுக்கு ஒன்றிய அரசு நிதிப்பகிர்வை அளித்துவிட்டது. தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு நிதிப்பகிர்வாக வெறும் ரூ.7,057 கோடி மட்டுமே அளித்துள்ளது. உத்தரப்பிர தேசம், பீகார், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு 40 சதவீத அள வுக்கு ஒன்றிய அரசு வரிப் பகிர்வு அளித்துள்ளது. தென் மாநிலங்களுக்கு வெறும் ரூ.27,000 கோடி வழங்கிய ஒன்றிய அரசு, உத்தரப்பிரதேச மாநி லத்துக்கு மட்டும் ரூ.31,000 கோடி வழங்கியுள்ளது.  வேடிக்கையான எடப்பாடியின் குற்றச்சாட்டு தமிழ்நாடு அரசு கோரிய ரூ.37,000 கோடி வெள்ள நிவாரண நிதியை ஒன்றிய அரசு இதுவரை வழங்க வில்லை. எஸ்.எஸ்.ஏ. திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு ரூ.2,000 கோடி நிலுவை வைத்துள்ளது. தென் மாநிலங்களுக்கு 15 சதவீத வரிப் பகிர்வை மட்டுமே ஒன்றிய அரசு அளித் துள்ளது. 8 ஆண்டுகளாக ஒன்றிய அரசு தனது பங்களிப்பை உயர்த்தவில்லை. மாநில பொருளாதார வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் அவசிய மான ஒன்று.  மற்ற மாநிலங்களில் உள்ள சர்வ தேச விமான நிலையங்களை விட  சென்னை விமான நிலையம் பரப்பள வில் சிறியதாகவே உள்ளது. போராடு பவர்களை எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் நேரில் சென்று சந்திக்கலாம். தமிழ்நாடு அரசு திவாலா கிறது என எடப்பாடி பழனிசாமி கூறி யது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு. அரசின் நிதி நிலைமை குறித்த எடப்பாடி பழனிசாமியின் குற்றச் சாட்டு வேடிக்கையாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.