சென்னை, நவ. 15 - ஓய்வூதியர்களுக்கான மருத்து வக் காப்பீட்டு திட்டத்தை மின்சார வாரியமே ஏற்று நடத்த வலியுறுத்தி வெள்ளியன்று (நவ.15) மாவட்ட தலைநகரங்களில் தர்ணா நடைபெற்றது. நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு மாறாக, முத்தரப்பு ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளது. ஓய்வூதியத்தை தொடர்ந்து வழங்க சரியான உத்தர வாதம் இல்லாத முத்தரப்பு ஒப்பந்தத்தை மாற்றி அமைக்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்ட த்தை மாற்றி அமைக்க வேண்டும். 2018 ஆம் ஆண்டு முதல் நிறு த்தப்பட்ட குடும்ப ஓய்வூதியத்தை திரும்ப வழங்க வேண்டும், ஓய்வு பெறும் நாளன்றே பணப்பலன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு இந்த போராட்டத்தை நடத்தியது. சென்னையில் மின்வாரிய தலைமையகம் அருகே நடைபெற்ற தர்ணா போராட்டத்தில் பேசிய அமைப்பின் தலைவர் எஸ்.ஜெக தீசன், “ஒவ்வொரு ஊழியரிடமிருந்து 497 ரூபாய் பிடித்தம் செய்து, ஆண்டுக்கு சுமார் 40 கோடி ரூபாய் காப்பீட்டு நிறுவனத்திற்கு செலுத்தப்படுகிறது. ஒருவர் 4 ஆண்டு இடைவெளியில் 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.
காப்பீட்டு நிறுவனம், மருத்துவ மனைகள் கேட்கும் தொகையை தர மறுக்கின்றன. வாரிய உத்தரவுக்கு மாறாக செயல்படுகின்றன. ஆண்டுக்கு 10 கோடி ரூபாய் அள விற்கு ஓய்வூதியர்களுக்கு காப்பீட்டு நிறுவனம் வழங்குகிறது. இதனால் பெருமளவு தொகையை ஓய்வூதி யர்கள் செலுத்த வேண்டி உள்ளது. எனவே, மருத்துவக் காப்பீடு திட்டத்தை வாரியமே ஏற்று நடத்த வேண்டும்” என்றார். இந்த போராட்டத்திற்கு நல அமை ப்பின் மாநிலச் செயலாளர் கே.ஆர். முத்துச்சாமி தலைமை வகித்தார். மாநிலப் பொதுச்செயலாளர் எஸ்.எஸ். சுப்பிரமணியம், பொருளாளர் ஏ.பழனி, மாநில நிர்வாகிகள் ஆர்.ராமநாதன், எஸ்.கணேசன், என்.வீர மணி, சம்பத் ராவ், மோகன், கே.நட ராஜன், முகவை பெருமாள், வெ. மன்னார் மற்றும் மாவட்டச் செய லாளர்கள் பேசினர்.