tamilnadu

பயிர் இழப்பீடாக ஹெக்டேருக்கு ரூ. 20 ஆயிரம்: அமைச்சர் அறிவிப்பு

பயிர் இழப்பீடாக ஹெக்டேருக்கு  ரூ 20 ஆயிரம்: அமைச்சர் அறிவிப்பு

சென்னை, டிச. 2 - மழையால் நீரில் மூழ்கி சேதமடைந்த விளை நிலங்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20,000 இழப்பீடு வழங்கப்படும் என  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். மாநிலம் முழுவதும் 85,521.76 ஹெக்டேர் விளை நிலங்கள் பாதிக்கப் பட்டுள்ளன. பயிர்ப் பாதிப்பு கணக் கெடுப்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மழை நின்ற பின்னர் பயிர்க் கணக்கெடுப்பு முழுமையாக மேற் கொள்ளப்படும். மாநிலம் முழுவதும் 582 கால்நடைகள் உயிரிழந்ததாகவும், கால்நடைகளுக்கும் நிவாரணம் வழங்கப்படும் என்று கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியுள்ளார்.